Ariyalur

News May 15, 2024

அரியலூர் மழைப்பொழிவு விவரம்

image

அரியலூர்மாவட்டத்தில் நேற்று (மே.14) பெய்த மழையின் அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி,செந்துறை பகுதியில் 5 சென்டி மீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. சமீபமாக தமிழகத்தில் ஆங்காங்கு மழைப்பொழிவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 15, 2024

அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்!

image

ஜெயங்கொண்டம் அரசு கலை கல்லூரியில் நிகழாண்டு மாணவர் சேர்க்கைக்கு மே 20 வரை விண்ணப்பிக்கலாம் என கல்லூரியின் முதல்வர் ரமேஷ் தெரிவித்துள்ளார். 2024-25 ஆம் கல்வி சேர விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் ரூ.48, பதிவு கட்டணம் ரூ.2. தமிழக அரசின் இட ஒதுக்கீடு மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் என தகவல்.

News May 15, 2024

ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் கலெக்டர்

image

ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை மற்றும் உடையார்பாளையம் அரசு மருத்துவமனைகளில் மாவட்ட ஆட்சியர் நேற்று(மே 14) ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து ஆய்வு செய்தார். கோடை வெப்பத்திலிருந்து மக்களை பாதுகாக்க வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கைகள், உபகரணங்கள் மற்றும் மருந்து மாத்திரைகள் குறித்து ஆய்வு செய்தார்.

News May 14, 2024

குழந்தை திருமணம் செய்தால் கடும் தண்டனை

image

குழந்தை திருமணச் சட்டம் 2006 இல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு திருமணம் செய்வது சட்டப்படி குற்றமாகும். 18 வயதுக்குட்பட்ட குழந்தையை 18 வயதிற்கு மேற்பட்டவர் திருமணம் செய்து கொண்டால் அவர்கள் குற்றவாளி ஆவார். குழந்தை திருமணம் நடந்தால் அதை ஏற்பாடு செய்தவர்கள், கலந்து கொண்ட அனைவரும் குற்றவாளிகளாக கருதப்படுவர். எனவே குழந்தை திருமணம் நடைபெற்றால் அதனை உடனடியாக 1098 என்ற எண்ணிற்கு தெரிவிக்கவும்.

News May 14, 2024

பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 30 ஆண்டுகள் சிறை

image

சுண்டக்குடியை சேர்ந்த விக்னேஷ்குமார் கடந்த 2021 இல் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமியின் பெற்றோர் கீழப்பழுவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் விக்னேஷ் குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் அவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.30000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

News May 14, 2024

அரியலூரில் 49 பள்ளிகள் 100% தேர்ச்சி

image

அரியலூர் மாவட்டத்தில் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள் விவரம் வருமாறு அரசு பள்ளிகள் 18, ஆதிதிராவிடர் நலப்பள்ளி 01, உதவி பெறும் பள்ளிகள் 5, சுயநிதி பள்ளிகள் 8, மெட்ரிக் பள்ளிகள் 17, என அரியலூர் மாவட்டத்தில் நடந்து முடிந்த 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தம் 49 பள்ளிகள் 100% தேர்ச்சியை பெற்றுள்ளது.

News May 14, 2024

அரியலூரில் வெளுத்து வாங்கிய மழை

image

அரியலூர் மாவட்டம் செந்துறை சமத்துவபுரம், இலைக் கடம்பூர், நலனாயகபுரம்,  ஆர் எஸ் மாத்தூர், ஆலத்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கோடை மழை இன்று பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் பூமி குளிர்ந்தது.  கத்திரி வெயில் வாட்டி வந்த நிலையில் அரியலூர் மாவட்ட மக்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர். 

News May 14, 2024

அரியலூர்-11ம் வகுப்பு தேர்ச்சி

image

அரியலூர் மாவட்டத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வை 92 பள்ளிகளைச் சேர்ந்த 8619 மாணவ/மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 4218 மாணவர்களும், 4401 மாணவிகளும் தேர்வு எழுதினர்.
54 அரசு பள்ளிகளில் 2529 மாணவர்களும், 2387 மாணவிகளும் ஆக மொத்தம் 4916 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 2285 மாணவர்களும், 2265 மாணவிகளும் ஆக மொத்தம் 4550 தேர்ச்சி பெற்றனர். அரசுப்பள்ளி தேர்ச்சி சதவீதம் 92.55 ஆகும்.

News May 14, 2024

அரியலூரில் வெளுத்து வாங்கிய மழை

image

அரியலூர் மாவட்டம் செந்துறை சமத்துவபுரம், இலைக் கடம்பூர், நலனாயகபுரம்,  ஆர் எஸ் மாத்தூர், ஆலத்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கோடை மழை இன்று பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் பூமி குளிர்ந்தது.  கத்திரி வெயில் வாட்டி வந்த நிலையில் அரியலூர் மாவட்ட மக்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர். 

News May 14, 2024

அரியலூர்: சான்றிதழ் வழங்கிய டிஎஸ்பி

image

அரியலூரில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கடந்த 15 நாள்களாக நடைபெற்று வந்த கைப்பந்து, தடகளம், கூடைப்பந்து, ஹாக்கி, கால்பந்து, சிலம்பம், ஸ்கேட்டிங் உள்ளிட்ட கோடைக்கால பயிற்சி முகாம் நேற்று நிறைவடைந்தது. பயிற்சி முகாமில் 220 மாணாக்கர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.  டிஎஸ்பி சிவக்குமார் கலந்து கொண்டு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பனியன்களை வழங்கினார்

error: Content is protected !!