Ariyalur

News January 27, 2026

அரியலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.26) இரவு 10 முதல் இன்று (ஜன.27) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News January 26, 2026

அரியலூர்: பெண் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து

image

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அடுத்துள்ள காரைக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் வேம்பு. இவர் காரைக்குறிச்சியில் இருந்து தா.பழூர் நோக்கி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பின்னால் வந்த 2 சக்கர வாகனம் மோதியத்தில், காயமடைந்த வேம்பு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 26, 2026

அரியலூர்: செல்வம் அருளும் விசலாட்சி உடனுறை விஸ்வநாதர்

image

அரியலூர் மாவட்டத்தில், சிறப்பு பெற்ற விசலாட்சி உடனுறை விஸ்வநாதர் கோவிலில் உள்ள காலபைரவர் சன்னதி அமைந்துள்ளது. அதில் உள்ள கால பைரவர் சன்னதியில் மிளகு விளக்கு ஏற்றி வழிபட்டால் கடன் பிரச்சனைகள் தீர்ந்து செல்வம் செழித்து வாழ்க்கை சிறக்கும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!

News January 26, 2026

குடியரசு தினம்- அரியலூரில் தேசியக் கொடி ஏற்றிய ஆட்சியர்

image

இந்திய திருநாட்டின் 77-ஆவது குடியரசு தின விழா, அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று நடைப்பெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி கலந்துகொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து சமாதான புறாவினை பறக்கவிட்டு, காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். இதில் அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News January 26, 2026

அரியலூர்: வங்கி வேலை.. ரூ. 48,000 சம்பளம்!

image

யூகோ வங்கியில் (UCO Bank) காலியாக உள்ள Generalist and Specialist Officers பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 173
3. வயது: 20 – 35
4. சம்பளம்: ரூ.48,480 – 93,960/-
5. கல்வி தகுதி: B.E/B.Tech, MBA, CA, M.Sc, MCA
6. கடைசி தேதி: 02.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 26, 2026

அரியலூர்: ஆதாரில் திருத்தம் செய்வது இனி ரொம்ப ஈஸி!

image

அரியலூர் மக்களே, ஆதார் அட்டையில் உங்களது பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே ‘<>இங்கே கிளிக்<<>>’ செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க

News January 26, 2026

அரியலூர்: Driving Licence பெற எளிய வழி

image

அரியலூர் மக்களே வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றிற்கு RTO அலுவலகம் செல்ல வேண்டாம். <>இந்த லிங்கில் சென்று<<>> மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.!

News January 26, 2026

அரியலூர்: பிறப்பு-இறப்பு சான்று வேண்டுமா? Hi சொல்லுங்க

image

அரியலூர் மக்களே இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.

News January 26, 2026

அரியலூர்: மாதம் ரூ.6,000 வேண்டுமா?

image

மத்திய அரசின் DDU-GKY திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பற்ற கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் 15 முதல் 35 வயதுடைய ஆண்களும், 40 வயதுக்குட்பட்ட பெண்களும் விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கும் 2 முதல் 6 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.6,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் பதிவு செய்ய இங்கே <>க்ளிக் <<>>செய்யுங்க. SHARE பண்ணுங்க.

News January 26, 2026

அரியலூர் மக்களே, மறக்காமல் கலந்து கொள்ளுங்கள்!

image

1. அரியலூர் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது
2. இதில் மக்கள் கலந்து கொண்டு கிராமத்தின் செலவு / வரவு கணக்குகளை பார்வையிட்டு கேள்வி எழுப்பலாம்.
3. கூட்டத்தில் கிராம மக்கள் ஒன்றிணைந்து தீர்மானம் இயற்றினால், அதனை அரசு/அதிகாரிகள் நினைத்தால் கூட ரத்து செய்ய முடியாது.
4. மக்களுக்கு முழு அதிகாரத்தையும் வழங்கும் கிராம சபை கூட்டத்தில் மறக்காமல் கலந்து கொள்ளுங்கள்!

error: Content is protected !!