India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.25) இரவு 10 முதல் இன்று (ஜன.26) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

அரியலூர், பொய்யாத நல்லூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற தையல்நாயகி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நீண்ட நாள் கடன் பிரச்சனை உள்ளவர்கள், குடும்ப பிரச்சினை மற்றும் தொழில் பிரச்சனை உள்ளவர்கள் மூலவரான தையல்நாயகி அம்மனுக்கு படையல் வைத்து அபிஷேகம் செய்து வழிபட்டால், வேண்டியது நடக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!

அரியலூர் மாவட்ட ஆட்சியர் கூட்ட அறிஞர் வாக்காளர் தினத்தை ஒட்டி, பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள், மாற்றுத்திறனாளி வாக்களார்கள், மூன்றாம் பாலின வாக்காளர்கள் மற்றும் இளம் வாக்காளர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி, பொன்னாடை போற்றி மரியாதை செய்தார்.

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 312
3. வயது: 18 – 40
4. சம்பளம்: ரூ.44,900
5. தகுதி: 12-ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 29.01.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதே போன்று, A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec)
இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு அரியலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்!

‘ஹரியலூர்’ என்பதே காலப்போக்கில் ‘அரியலூர்’ என மாறியதாக கூறப்படுகிறது. அரி+இல்+ஊர் = அரியலூர்; அரி-விஷ்ணு, இல் உறைவிடம், ஊர்-பகுதி; பகவான் விஷ்ணு உறைவிடம் கொண்ட பகுதி என்பது இதன் பொருள். விஷ்ணு கோயில்கள் அதிகமாக உள்ளதாலும் இப்பெயர் வந்திருக்கலாம். மேலும், ‘அரியல்’ என்ற ஒருவகை பானத்தாலும் இப்பெயர் என சொல்லப்படுகிறது. இதனை ஷேர் செய்துவிட்டு, உங்களுக்கு தெரிந்த வேறு பெயர்க்காரணத்தை COMMENT பண்ணுங்க!

அரியலூர் மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் https://voters.eci.gov.in/login என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க!

முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா “இது நம்ம ஆட்டம் 2026” விளையாட்டுப் போட்டிகள் அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இன்று நடைபெற உள்ளது. இன்று காலை 10.15 மணியளவில், அரியலூர் ஒன்றிய அளவில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், வாலிபால், கேரம் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

விக்கிரமங்கலம் அருகே முத்துவாஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் மயில் ராவணன் ( 34). இவரை அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் (30) என்பவர், முன்விரோதம் காரணமாக தனது நண்பர்களுடன் சேர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், சம்பத்தில் ஈடுபட்ட சுரேஷ், சதீஷ், அஜித் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.