India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் மக்களவை மற்றும் விளவங்கோடு இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. தமிழகத்தில் ஒரேகட்டமாக ஏப்.19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வரும் 27ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுத் தாக்கல் பெறப்படும். 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். மார்ச் 30ஆம் தேதி மனுக்களை பெற கடைசி நாளாகும். அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
திருவனந்தபுரத்தில் பாஜக எதிர்ப்பு வாக்குகளை பிரிக்கும் வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சாரம் செய்வதாக காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் குற்றம்சாட்டியுள்ளார். திருவனந்தபுரத்தில் பேசிய அவர், ‘கடந்த 2 தேர்தல்களில் பாஜக இரண்டாமிடம் பெற்றுள்ளது. எதிர்க்கட்சி கூட்டணியில் ஒற்றுமை இல்லையென பாடமெடுக்கும் கம்யூனிஸ்டுகள், தற்போது எனக்கு எதிராக செய்யும் பிரச்சாரம் பாஜகவுக்கு உதவியாக போய் முடியும்’ என்றார்.
➤1602 – டச்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி அமைக்கப்பட்டது. ➤1854 – அமெரிக்காவின் குடியரசுக் கட்சி விஸ்கான்சின் ரிப்போன் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. ➤1915 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது சார்பியல் கோட்பாட்டை வெளியிட்டார். ➤ 1948 – சிங்கப்பூரில் முதலாவது தேர்தல் நடைபெற்றது ➤1956 – பிரான்சிடம் இருந்து துனீசியா விடுதலை அடைந்தது. ➤2003 – ஈராக் மீது அமெரிக்கக் கூட்டு படைகள் ராணுவ நடவடிக்கையை தொடங்கின.
இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் விற்பனையை நிறுத்த கனடா முடிவு செய்துள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் மெலோனி ஜோலி தெரிவித்துள்ளார். காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு இதுவரை 30,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சமீபகாலமாக பொதுமக்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதை அடுத்து, கனடா நாடாளுமன்றத்தில் ஆயுதங்கள் விற்பனைக்கு தடை விதிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கொல்கத்தாவில் 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. கொல்கத்தாவின் கார்டன் ரீச் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டடம் ஞாயிறு நள்ளிரவில் திடீரென இடிந்து விழுந்தது. இதில் 17க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும் காணாமல் போன இருவரை தேடும் பணியில் மீட்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
◾பால்: அறத்துப்பால்
◾ இயல் : இல்லறவியல்
◾அதிகாரம்: ஒழுக்கமுடைமை
◾குறள்: 138 நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்.
◾விளக்கம்: நல்லொழுக்கம், அறமாகிய நன்மைக்கு வித்தாக அமைந்து இம்மை மறுமையிலும் இன்பம் தரும்; தீயொழுக்கமோ துன்பமே தரும்.
கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை விட விராட் கோலி தான் சிறந்த பேட்ஸ்மேன் என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து புகழாரம் சூட்டியுள்ளார். அரசியலில் இருந்து மீண்டும் கிரிக்கெட் வர்ணனையாளராக மாறியுள்ள சித்து, ‘ஐ.பி.எல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடும் கோலி, 3ஆவது பேட்ஸ்மேனாக விளையாடக் கூடாது. கோலி ஓய்வுப் பெறுவதற்கு முன்னர் நிச்சயம் கோப்பையை வெல்ல வேண்டும்’ என்றார்.
உலகம் மனிதனுக்கு மட்டுமானது அல்ல. அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது. நகர மயமாதல், மனிதர்களின் பழக்கவழக்கங்களில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாறுதல்களால், மனிதர்களைச் சார்ந்து வாழும் சிட்டுக்குருவிகள் உணவு பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொள்கின்றன. இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, 2010ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20ஆம் தேதி உலக சிட்டுக்குருவிகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
உங்களுக்கு தான் தூக்கம் தொலைந்து விட்டது. அதனால் தான் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வந்து புலம்பிவிட்டு போகிறீர்கள் என பிரதமர் மோடிக்கு டி.ஆர்.பாலு பதிலடி அளித்துள்ளார். தமிழகத்தில் பாஜகவுக்கு கிடைக்கும் ஆதரவை பார்த்து திமுகவின் தூக்கம் தொலைந்துவிட்டதென பிரதமர் மோடி விமர்சித்தார். இதற்கு அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘பத்தாண்டு அழிவு ஆட்சியில் இருந்து விடுதலை பெற இந்திய மக்கள் தயாராகி விட்டனர்’ என்றார்.
இன்று (மார்ச் 20) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
Sorry, no posts matched your criteria.