News April 10, 2024

திக்குமுக்காட வைக்கும் தங்கம் விலை

image

ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து, மக்களை திக்குமுக்காட வைத்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.53,640க்கும், கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.6,705க்கும் விற்பனையாகிறது. கிராம் வெள்ளியின் விலை ரூ.1 உயர்ந்து ரூ.89க்கும், கிலோ வெள்ளி ரூ.89,000க்கும் விற்பனையாகிறது. கடந்த 10 நாளில் தங்கம் விலை ரூ.2000, வெள்ளி விலை ரூ.7.40 உயர்ந்துள்ளன.

Similar News

News December 16, 2025

சுவாமிநாதனுக்கு எதிராக அவதூறு.. SC-ல் வழக்கு

image

நீதிபதி G.R.சுவாமிநாதன் குறித்து அவதூறு பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பாஜக வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி SC-ல் வழக்கு தொடர்ந்துள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தை தொடர்ந்து, நீதிபதி குறித்து திமுக ஆதரவு கட்சியினர் சட்டவிரோத போராட்டங்களை நடத்தி அவதூறு பரப்புவதாகவும், அவர்கள் மீது மாநில அரசும், போலீசும் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News December 16, 2025

IPL 2026 அப்டேட்

image

IPL 2026 தொடங்கும் தேதி மாற்றப்பட்டுள்ளது. மார்ச் 15-ம் தேதி தொடங்கும் என்று ஏற்பாட்டாளர்கள் முன்பு அறிவித்திருந்த நிலையில், தற்போது முதல் போட்டி மார்ச் 26-ஆம் தேதி நடைபெறும் என்றும் இறுதிப் போட்டி மே 31-ம் தேதி நடைபெறும் என்றும் cricbuzz-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், IPL மினி ஏலம் நாளை அபுதாபியில் நடைபெற உள்ளது.

News December 16, 2025

நவோதயா பள்ளிகள்.. TN அரசுக்கு 6 வாரம் கெடு

image

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை அமைப்பதற்கான இடங்களை 6 வாரத்திற்குள் கண்டறிய TN அரசுக்கு SC உத்தரவிட்டுள்ளது. ஹிந்தியை திணிப்பதால் இந்த பள்ளிகளை எதிர்ப்பதாக அரசு தெரிவிக்க, மாணவர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்காதீர்கள் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும், மத்திய அரசிடம் இருந்து கல்வி நிதி பெறுவதில் சிக்கல் இருந்தால், தமிழக அரசு அதிகாரிகளை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தவும் அறிவுறுத்தியுள்ளனர்.

error: Content is protected !!