News April 10, 2024

குறைந்த மக்களவைத் தொகுதி கொண்ட மாநிலங்கள் (2)

image

நாடு முழுவதும் 6 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தலா 2 மக்களவைத் தொகுதிகளே உள்ளன. வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், அருணாச்சல் பிரதேசம், மேகாலயா, திரிபுரா மாநிலங்களில் தலா 2 மக்களவைத் தொகுதிகளே இருக்கின்றன. அதேபோல், கோவா மற்றும் தாதர் நாகர்ஹவேலி டாமன் டையூ ஆகியவற்றிலும் தலா 2 தொகுதிகளே உள்ளன. ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் 4 மக்களவைத் தொகுதிகள் உள்ளன.

Similar News

News December 10, 2025

CM-ஐ தூங்கவிடாமல் செய்யும் EPS: செம்மலை

image

அரசியலில் எதிரிகள், துரோகிகளின் விமர்சனங்களை கடந்து செல்லும் EPS-யிடம் அசாத்திய துணிச்சலை பார்ப்பதாக செம்மலை கூறியுள்ளார். ஆளுங்கட்சி திட்டமிட்டு அதிமுகவை பலவீனப்படுத்துவதாக கூறிய அவர், பொதுக்குழு கூட்டத்தில் EPS-ன் உரையால் கட்சிக்கு உத்வேகம் பிறக்கும் எனவும் பேசியுள்ளார். தூங்காமல் களப்பணிகளை செய்துவருவதாக CM கூறுவது பொய் எனவும், EPS தான் CM-ஐ தூங்கவிடாமல் செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News December 10, 2025

BREAKING: அதிரடி மாற்றம் செய்தார் EPS

image

அதிமுகவின் தற்காலிக அவைத் தலைவராக EX அமைச்சர் KP முனுசாமி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்மகன் உசேனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், அவருக்கு இந்த கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக உள்ள KP முனுசாமி, EPS மீது அதிருப்தியில் உள்ளதாக அண்மைக் காலமாக பேசப்பட்டு வந்த நிலையில், அதற்கு இது முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

News December 10, 2025

ஊழியர்களுக்கு விரைவில் HAPPY NEWS

image

EPF கணக்கிலுள்ள தொகைக்கு வழங்கப்படும் வட்டியை உயர்த்த மத்திய அரசு திட்டமிடுவதாக கூறப்படுகிறது. அதன்படி, தற்போதுள்ள 8.2% வட்டி, ஜனவரி முதல் 8.7% வரை உயர்த்தப்படலாம். இது நடந்தால், EPF கணக்கில் ₹5 லட்சம் வைத்திருப்பவருக்கு சுமார் ₹42,000 வட்டியும், ₹6 லட்சம் வைத்திருந்தால் ₹50,000 வட்டியும் கிடைக்கும். உங்கள் EPF பேலன்ஸை தெரிந்துகொள்ள 7738299899 நம்பருக்கு ’EPFOHO UAN’ என SMS அனுப்புங்கள். SHARE.

error: Content is protected !!