India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கச்சா எண்ணெய் மீதான Windfall வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. எதிர்பாராத அதிகப்படியான லாபம் மீது விதிக்கப்படும் இந்த வரி, கச்சா எண்ணெய்க்கு டன்னுக்கு ₹9,600இல் இருந்து ₹8,400ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ள நிலையில், வணிக கேஸ் சிலிண்டருக்கான விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைந்துள்ளன. முன்னதாக, கடந்த மாதம் ₹6,800ஆக இருந்த Windfall வரி ₹9,600ஆக உயர்த்தப்பட்டது.
நடப்பு ஐ.பி.எல் தொடரில் விளையாடிய 11 போட்டிகளில் 6இல் தோல்வியைச் சந்தித்த DC அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறுமா என கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பேசிய DC அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஜேம்ஸ் ஹோப்ஸ், “இப்போது கூட இப் போட்டியில் எங்களது தலைவிதி எங்கள் கைகளில் தான் உள்ளது. அதாவது, எஞ்சிய 3 ஆட்டங்களில் வென்றால் போதும், 16 புள்ளிகளுடன் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெறும்” எனத் தெரிவித்தார்.
தமிழகத்திற்கு ஒரே நேரத்தில் வெப்ப அலை மற்றும் மிதமான மழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் 3 நாட்களுக்கு மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப அலை வீசும் என்றும், சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதேபோல், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப அலைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
பாலியல் புகாரில் சிக்கிய கர்நாடக எம்.பி பிரஜ்வாலுக்கும், அவரது தந்தை ரேவண்ணாவுக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு சம்மன் அனுப்பியுள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து பிரஜ்வால் நேற்று இடைநீக்கம் செய்யப்பட்டார். அவரை கைது செய்ய கர்நாடக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையமும் பரிந்துரைத்துள்ளது. பிரஜ்வால் தற்போது ஜெர்மனியில் உள்ளதால் அவர் விசாரணைக்கு ஆஜராக வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.
மதுபானக் கொள்கை வழக்கில் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட நேரம் குறித்து விளக்கம் அளிக்க அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்குப்பதிவு செய்யப்பட்ட 18 மாதங்களுக்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட கெஜ்ரிவால் தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதிகள், மக்களவைத் தேர்தல் நேரத்தில் அவரை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? என கேள்வி எழுப்பி, இந்த கால இடைவெளி கவலை அளிப்பதாகத் தெரிவித்தனர்.
கர்நாடகாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தைத் தமிழக அரசு நாடும் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். என்றாவது ஒருநாளாவது தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என கர்நாடகா கூறியுள்ளதா? எனக் கேள்வி எழுப்பிய அவர், அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும் தண்ணீர் தரமாட்டோம் என்றே கூறும் என சாடினார். தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என ஒழுங்காற்றுக் குழுவிடம் கர்நாடகா நேற்று கூறியது குறிப்பிடத்தக்கது.
தென்னிந்தியாவில், 51 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஏப்ரல் மாதத்தில் 2ஆவது அதிகபட்ச வெயில் பதிவாகி உள்ளது. அதாவது, மார்ச்சில் தென்னிந்தியாவின் அதிகபட்ச வெயிலின் சராசரி 37.2 டிகிரி செல்சியஸ் ஆகும். இது 2016 ஏப்ரலில் அதிகபட்சமாக 37.6 டிகிரி செல்சியஸ் ஆக பதிவான நிலையில், தற்போது 37.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. கடந்த திங்கள்கிழமை ஆலப்புழாவில் வாழ்நாள் உச்சமாக 38.3 டிகிரி செல்சியஸ் பதிவானது.
மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைத் தேர்தலும் நடக்கும் ஆந்திராவில் தெலுங்கு தேசம்- பாஜக -ஜனசேனா கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. நேற்று தெ.தேசம், ஜனசேனா கட்சிகள் கூட்டாக தேர்தல் அறிக்கையை வெளியிட, அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநில பாஜக பொறுப்பாளர் தேர்தல் அறிக்கையை வாங்க மறுத்துவிட்டார். தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற பல்வேறு வாக்குறுதிகளில் உடன்பாடு இல்லாததால் பாஜக எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மிட்செல் மார்ஷ் தலைமையிலான 15 பேர் கொண்ட டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியைத் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. அதில், கம்மின்ஸ், ஆகர், டிம் டேவிட், எல்லிஸ், கிரீன், ஹேசில்வுட், ஹெட், இங்கிலிஸ், மேக்ஸ்வெல், ஸ்டார்க், ஸ்டோய்னிஸ், வேட், வார்னர், ஜாம்பா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். நடப்பு ஐ.பி.எல் தொடரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸ்மித், மெக்குர்க் போன்ற வீரர்களுக்கு இடம் மறுக்கப்பட்டுள்ளது.
தோனி விட்டுச் சென்ற ஃபினிஷர் இடத்தை நிரப்ப ரிங்கு சிங்தான் தகுதியானவர் என்று முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான நவ்ஜோத் சிங் சித்து கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட்டின் புதிய ஃபினிஷராக அறியப்படும் ரிங்கு சிங், டி20 தொடருக்கான ரிசர்வ் பட்டியலில் உள்ளதாகக் கூறப்படுகிறது. அணியில் மாற்றங்களுக்கு இம்மாதம் 25ஆம் தேதி வரை வாய்ப்புள்ளதால், ரிங்கு சிங்குக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.