News May 1, 2024

உச்சநீதிமன்றத்தை நாடும் தமிழகம்

image

கர்நாடகாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தைத் தமிழக அரசு நாடும் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். என்றாவது ஒருநாளாவது தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என கர்நாடகா கூறியுள்ளதா? எனக் கேள்வி எழுப்பிய அவர், அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும் தண்ணீர் தரமாட்டோம் என்றே கூறும் என சாடினார். தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என ஒழுங்காற்றுக் குழுவிடம் கர்நாடகா நேற்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 15, 2025

கிருஷ்ணகிரி: EB பில் நினைத்து கவலையா??

image

கிருஷ்ணகிரி மக்களே உங்க கரண்ட் கம்மியா பயன்படுத்துன மாதிரியும், கரண்ட் பில் கூட வர மாதிரியும் இருக்கா?இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! இங்கு <>கிளிக் <<>>செய்து TNEB ‘பில் கால்குலேட்டர்லில் (Domestic) என்பதை தேர்ந்தெடுத்து, இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். பில் கூட வந்தா 94987 94987 எண்ணில் புகார் தெரிவியுங்க.SHARE

News December 15, 2025

இரவு 10 மணிக்கு மேல் போனில் இத பார்த்தால் ₹1,000 அபராதம்

image

ரயிலில் இரவு நேரத்தில் பலர் போனில் சத்தமாக ரீல்ஸ் அல்லது யூடியூப் வீடியோ பார்த்தபடி பயணிப்பார்கள். அவர்களுக்கு அது பொழுதுபோக்கு என்றாலும், மற்றவர்களுக்கு எரிச்சல்தானே! ரயில்வே சட்டப்பிரிவு 145-ன் படி, இரவு 10 மணிக்கு மேல் யாரும் போனில் சத்தமாக வீடியோ பார்க்கவோ, சத்தமாக பேசவோ கூடாது என்ற சட்டமே உள்ளது. இதனை மீறுபவர்களுக்கு ₹500- ₹1,000 வரை அபராதம் விதிக்கப்படும். இத்தகவலை அனைவருக்கும் பகிரவும்.

News December 15, 2025

இதுதான் தீபத்தூண்: போட்டோ சமர்பித்த அறநிலையத்துறை

image

திருப்பரங்குன்றம் விவகாரத்தில், மலைகளில் உள்ள தூண்களின் புகைப்படங்களை அறநிலையத்துறை ஐகோர்ட்டில் சமர்ப்பித்துள்ளது. மேலும், மலை மீது உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே உள்ளதுதான் தீபத்தூண் என மக்கள் நம்புகிறார்கள்; அதில், நாயக்கர்களின் பெயர்களும், ஹனுமான் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால், தனி நீதிபதி தீபம் ஏற்ற உத்தரவிட்டுள்ள தூணில் கடவுளின் உருவங்கள் எதுவும் இல்லை என்றும் விளக்கமளித்துள்ளது.

error: Content is protected !!