News May 1, 2024
ரிங்குவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சித்து

தோனி விட்டுச் சென்ற ஃபினிஷர் இடத்தை நிரப்ப ரிங்கு சிங்தான் தகுதியானவர் என்று முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான நவ்ஜோத் சிங் சித்து கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட்டின் புதிய ஃபினிஷராக அறியப்படும் ரிங்கு சிங், டி20 தொடருக்கான ரிசர்வ் பட்டியலில் உள்ளதாகக் கூறப்படுகிறது. அணியில் மாற்றங்களுக்கு இம்மாதம் 25ஆம் தேதி வரை வாய்ப்புள்ளதால், ரிங்கு சிங்குக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
Similar News
News December 8, 2025
போராட்டத்துக்கு அனைத்து கட்சிகளையும் அழைத்த பாமக

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என வலியுறுத்தி, வரும் 17-ம் தேதி பாமக சார்பில் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் கலந்துகொள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், சமூக அமைப்புகளுக்கும் அன்புமணி அழைப்பு விடுத்து கடிதம் எழுதியுள்ளார். அதில் சமூகநீதியில் அக்கறை கொண்ட தாங்களும் போராட்டத்தில் பங்கேற்று சமூகநீதியை பாதுகாக்க ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளர்.
News December 8, 2025
WC வெற்றிக்கு அடித்தளமிட்ட பிரதிகாவுக்கு ₹2 கோடி பரிசு

ODI உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணியில் 308 ரன்கள் குவித்த பிரதிகா ராவல், காயம் காரணமாக அரையிறுதி & ஃபைனலில் விளையாடவில்லை. இந்நிலையில், WC-ல் அவர் அளித்த பங்கை கெளரவிக்கும் விதமாக, டெல்லி CM ரேகா குப்தா, பிரதிகாவுக்கு ₹1.5 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளார். அத்துடன், டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் கூட்டமைப்பும் (DDCA), பிரதிகாவுக்கு ₹50 லட்சம் பரிசுத்தொகையை அறிவித்துள்ளது.
News December 8, 2025
தெலுங்கு நடிகருடன் மீனாட்சி சௌத்ரி காதலா?

GOAT-ல் விஜய்யுடன் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் மீனாட்சி சௌத்ரி. இவர் நாகார்ஜுனாவின் உறவினரான நடிகர் சுஷாந்தை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் தாங்கள் இருவரும் நண்பர்கள் தான் என மீனாட்சி விளக்கம் அளித்துள்ளார். மேலும், தெலுங்கில் நடிக்க தொடங்கியதில் இருந்து இப்படித்தான் மாதம் ஒரு நடிகருடன் தன்னை தொடர்புபடுத்தி செய்தி வருவதாகவும் அவர் காட்டமாக தெரிவித்துள்ளார்.


