India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாலியல் புகாரில் சிக்கிய கர்நாடக எம்.பி பிரஜ்வால் விசாரணைக்கு ஆஜராக 7 நாள்கள் அவகாசம் கோரியுள்ளார். பிரஜ்வால் பெண்களுடன் நெருக்கமாக இருந்த வீடியோ வெளியான நிலையில், அவர் வெளிநாட்டில் தலைமறைவானார். இந்நிலையில், பிரஜ்வால் நேரில் ஆஜராக சிறப்பு புலனாய்வு குழு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்கு வழக்கறிஞர் மூலம் பதிலளித்துள்ள அவர், ஒரு வாரத்தில் நேரில் ஆஜராவதாக கூறியுள்ளார்.
பாஜக தொழிலாளர்களின் போராட்ட உரிமைகளை பறித்துள்ளதாக CPM தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பாஜக, மத ரீதியாக மக்களை பிளவுப்படுத்தியது மட்டுமல்லாமல், கார்ப்பரேட் ஆதரவு கொள்கையை கடைபிடிப்பதால் நாட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், வாக்குறுதி என்ற பெயரில் கணக்கற்ற பொய்களை பிரதமர் மீண்டும் கூறி வருவதாக குற்றம்சாட்டினார்.
புதிய படத்தில் இணைந்து நடிக்க ஷாருக் கான், அமீர் கான், சல்மான் கான் காத்திருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தி திரையுலகின் முப்பெரும் நட்சத்திரங்களான அவர்கள், இதுவரை இணைந்து ஒரு படத்தில் கூட நடித்ததில்லை. இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமீர்கான், 3 பேரும் இணைந்து நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாகவும், நல்ல கதை, இயக்குநருக்காக காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ், 2 நாள் தேர்தல் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. சிர்சில்லாவில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் சந்திரசேகர் ராவ் பேசியபோது, காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து காங்கிரஸ் அளித்த புகாரின் பேரில் இன்றிரவு 8 மணி முதல் அடுத்த 48 மணி நேரத்துக்கு பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலர் திராட்சை ஊற வைத்த தண்ணீரை தொடர்ந்து குடித்து வந்தால் பல நன்மைகள் கிடைக்கும். அவை என்னென்ன? * உடல் எடை குறையும் * உடலில் இருந்து நச்சுக்களை நீக்கும் * கல்லீரலை சுத்தம் செய்யும் * தூக்கமின்மையைப் போக்கும் * குடல் செயல்பாட்டை சீராக்கி, வயிறு பிரச்னையைப் போக்கும் * நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் *இரும்புச் சத்து குறைபாட்டை போக்கும் *இதய ஆரோக்கியத்திற்கு உதவும்.
டி20 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்கு முன்னேறும் 4 அணிகள் குறித்து மைக்கேல் வாகன், தனது கணிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அவரது கணிப்பின் படி, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 4 அணிகளே அரையிறுதிக்கு தகுதி பெறும் என்று தெரிவித்துள்ளார். 2013க்கு பிறகு, இந்தியா ஐசிசி தொடர்களை வெல்லாததால், இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு மிகக் குறைவு என்றும் அவர் கூறியுள்ளார்.
குரு பார்க்க கோடி நன்மை என்கிறது ஜோதிட சாஸ்திரம். அந்த குருவின் பார்வையால் சில ராசியினர் கஷ்டங்களையும் அனுபவிக்க நேரிடும். அந்த வகையில், இன்றைய குரு பெயர்ச்சி ரிஷபம், மிதுனம், துலாம், தனுசு, மீன ராசியினருக்கு சில கஷ்டங்களை கொடுக்க உள்ளது. செய்யும் செயலில் தடங்கல், ஆரோக்கியத்தில் குறைபாடு, பணத் தடை, வீடு, நிலம் சார்ந்த பிரச்னைகள் என சிரமங்களை எதிர்கொள்ள உள்ளனர். பரிகாரங்கள் மூலம் நன்மை பெறலாம்.
குருபெயர்ச்சியை ஒட்டி திருச்செந்தூர், பாடி திருவலிதாயம், குருவித்துறை உட்பட பல்வேறு குருபகவான் ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. மிகவும் சிறப்புவாய்ந்த திருவாரூர் ஆலங்குடி குருபகவான் ஆலயத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய குருபகவானுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருவதால், பாதுகாப்புப் பணிக்காக 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேஷ ராசியிலிருந்து குரு பகவான் ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்தார். குரு பெயர்ச்சி நடக்கும் போதெல்லாம் பல ராசியினரின் வாழ்க்கை அப்படியே பாசிட்டிவாக மாறும். அந்த வகையில் மேஷம் – மீனம் வரை 12 ராசியினருக்கும், அவரவர் பாதம், நட்சத்திரம் அடிப்படையில் குரு பார்வை படும்போது அதிர்ஷ்ட பெறுவார்கள். குறிப்பாக, பணம், புகழ் சேரும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உருவாகும். புதிய வேலை வாய்ப்பு தேடி வரும்.
குட்டிப்புலி திரைப்பட இயக்குநர் முத்தையா இயக்கத்தில் மருது படத்தில் விஷால் நடித்திருந்தார். அந்தப் படம் வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், முத்தையா இயக்கத்தில் புதிய படத்தில் விஷால் மீண்டும் நடிக்க இருப்பதாகவும், மருது திரைப்படம் போல இதுவும் கிராமத்து பின்னணி கதையம்சம் கொண்டதெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.