News May 1, 2024
குரு பெயர்ச்சியால் இந்த ராசியினருக்கு சிக்கல்

குரு பார்க்க கோடி நன்மை என்கிறது ஜோதிட சாஸ்திரம். அந்த குருவின் பார்வையால் சில ராசியினர் கஷ்டங்களையும் அனுபவிக்க நேரிடும். அந்த வகையில், இன்றைய குரு பெயர்ச்சி ரிஷபம், மிதுனம், துலாம், தனுசு, மீன ராசியினருக்கு சில கஷ்டங்களை கொடுக்க உள்ளது. செய்யும் செயலில் தடங்கல், ஆரோக்கியத்தில் குறைபாடு, பணத் தடை, வீடு, நிலம் சார்ந்த பிரச்னைகள் என சிரமங்களை எதிர்கொள்ள உள்ளனர். பரிகாரங்கள் மூலம் நன்மை பெறலாம்.
Similar News
News December 5, 2025
டிசம்பர் 5: வரலாற்றில் இன்று

*1896–சென்னை கன்னிமாரா நூலகத்தில் பொதுமக்களுக்கு அனுமதி *1905–அரசியல்வாதி ஷேக் அப்துல்லா பிறந்தநாள் *1930–அரசியல்வாதி எஸ்.டி.சோமசுந்தரம் பிறந்தநாள் *1954–எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு நாள் *1960–நடிகை சரிகா பிறந்தநாள் *1980–நடிகர் சுருளி ராஜன் நினைவு நாள் *2006–கொலை வழக்கில் சிபு சோரனுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு *2013–நெல்சன் மண்டேலா நினைவு நாள் *2016–முன்னாள் CM ஜெ.ஜெயலலிதா நினைவு நாள்
News December 5, 2025
1975-ல் டாலருக்கு நிகரான ₹ மதிப்பு.. எவ்வளவு தெரியுமா?

டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு, வரலாறு காணாத அளவுக்கு ₹90.43 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. 1975-ல் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ₹8.97 ஆக இருந்துள்ளது. 2010-ல் ரூபாயின் மதிப்பு ₹44.64 ஆக இருந்த நிலையில், அடுத்த 15 வருடங்களில் அது இரட்டிப்பாகி தற்போது ₹90.05 ஆக உள்ளது. வெளிநாட்டு முதலீடுகள் வெளியேற்றம், அமெரிக்க-இந்திய வர்த்தக உறவில் பிரச்னை ஆகியவை இதற்கான காரணங்களாக உள்ளன.
News December 5, 2025
Cinema 360°: ரீ-ரிலீசாகும் ரஜினியின் ‘படையப்பா’

*ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு ‘படையப்பா’ ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக தகவல் *ஆதி நடித்துள்ள ‘DRIVE’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது *ரீ-ரிலீசில் அஜித்தின் ‘அட்டகாசம்’ ₹98 லட்சம் வசூல் செய்துள்ளது *அஷ்வின் குமாரின் ‘தூள்பேட்டை போலீஸ் ஸ்டேஷன்’ சீரிஸ் இன்று முதல் ஆஹா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிறது *கார்த்தியின் ‘வா வாத்தியார்’ இசைவெளியீட்டு விழா டிச.6-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது


