News May 1, 2024
குரு பெயர்ச்சியால் நன்மை பெறும் ராசிகள்

மேஷ ராசியிலிருந்து குரு பகவான் ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்தார். குரு பெயர்ச்சி நடக்கும் போதெல்லாம் பல ராசியினரின் வாழ்க்கை அப்படியே பாசிட்டிவாக மாறும். அந்த வகையில் மேஷம் – மீனம் வரை 12 ராசியினருக்கும், அவரவர் பாதம், நட்சத்திரம் அடிப்படையில் குரு பார்வை படும்போது அதிர்ஷ்ட பெறுவார்கள். குறிப்பாக, பணம், புகழ் சேரும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உருவாகும். புதிய வேலை வாய்ப்பு தேடி வரும்.
Similar News
News December 9, 2025
இன்னும் 100 நாட்களே! யஷ் பட போஸ்டர் வைரல்!

யஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘டாக்ஸிக்’ படம் அடுத்த ஆண்டு, மார்ச் 19-ம் தேதி வெளியாக உள்ளது. படம் வெளியாக இன்னும் 100 நாட்களே உள்ளதாக கூறி படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில், ரசிகர்கள் அதை வைரலாக்கி வருகின்றனர். கீது மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படத்தில் டொவினோ தாமஸ், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மினி வசந்த் என நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.
News December 9, 2025
செங்கோட்டையனுக்கு அதிர்ச்சி.. பரபரப்பு குற்றச்சாட்டு

அதிமுகவில் மீண்டும் இணைந்துள்ள செங்கோட்டையனின் அண்ணன் மகன் <<18510806>>கே.கே.செல்வம்<<>>, செங்கோட்டையன் மீது அடுக்கடுக்காக குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் அதிமுகவிற்கு துரோகம் செய்திருப்பதாகவும், இபிஎஸ் மீது தவறான குற்றச்சாட்டுகளை பரப்பி வருவதாகவும் சாடியுள்ளார். மேலும், தங்கள் குடும்பம் இல்லையென்றால், 2016 தேர்தலில் சித்தப்பா(செங்கோட்டையன்) தோல்வியை தழுவி இருப்பார் என்றும் கே.கே.செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
News December 9, 2025
சூழ்ச்சி செய்து எங்களை பிரித்தது ஜிகே மணி தான்!

பாமகவின் உள்கட்சி பிரச்னைகளுக்கு பாஜகவே காரணம் என திமுக கூறி வந்த நிலையில், குழப்பங்களுக்கு திமுக தான் காரணம் என அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். கட்சி கூட்டத்தில் பேசிய அவர், தான் தலைவரான அடுத்த நாளில் இருந்தே ஜிகே மணி சூழ்ச்சியை ஆரம்பித்துவிட்டதாக விமர்சித்துள்ளார். சூழ்ச்சி செய்து அப்பா பிள்ளை உறவை பிரித்தது அவர் தான் எனவும் அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.


