News May 1, 2024

WC T20 அரையிறுதிக்கு செல்லும் அணிகளை கணித்த வாகன்

image

டி20 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்கு முன்னேறும் 4 அணிகள் குறித்து மைக்கேல் வாகன், தனது கணிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அவரது கணிப்பின் படி, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 4 அணிகளே அரையிறுதிக்கு தகுதி பெறும் என்று தெரிவித்துள்ளார். 2013க்கு பிறகு, இந்தியா ஐசிசி தொடர்களை வெல்லாததால், இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு மிகக் குறைவு என்றும் அவர் கூறியுள்ளார்.

Similar News

News December 15, 2025

மதுரை: எம்.பி கனிமொழி மீது அவதூறு… ஒருவர் கைது

image

திருப்பரங்குன்றத்தில் மலை மீது தீபம் ஏற்ற வேண்டும் என்று கூறி திருப்பரங்குன்றம் கிராம மக்கள் சார்பாக நேற்று முன்தினம் (டிச.13) உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு வந்திருந்த திருப்பரங்குன்றத்தை சேர்ந்த கார்மேகம்(65) தூத்துக்குடி எம்பி கனிமொழி குறித்து யூடியூப் சேனலில் அவதூறாக பேசியதாக, திருப்பரங்குன்றம் போலீசார் இன்று அவரை கைது செய்தனர்.

News December 15, 2025

இதுதான் தீபத்தூண்: போட்டோ சமர்பித்த அறநிலையத்துறை

image

திருப்பரங்குன்றம் விவகாரத்தில், மலைகளில் உள்ள தூண்களின் புகைப்படங்களை அறநிலையத்துறை ஐகோர்ட்டில் சமர்ப்பித்துள்ளது. மேலும், மலை மீது உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே உள்ளதுதான் தீபத்தூண் என மக்கள் நம்புகிறார்கள்; அதில், நாயக்கர்களின் பெயர்களும், ஹனுமான் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால், தனி நீதிபதி தீபம் ஏற்ற உத்தரவிட்டுள்ள தூணில் கடவுளின் உருவங்கள் எதுவும் இல்லை என்றும் விளக்கமளித்துள்ளது.

News December 15, 2025

மெஸ்ஸிக்கு ₹200 கோடி; இந்திய கால்பந்துக்கு எவ்வளவு?

image

மெஸ்ஸியின் இந்திய பயணத்துக்கு ₹200 கோடி செலவானதாம். இவரின் 3 நாள் நிகழ்ச்சிக்கு இத்தனை கோடி செலவு செய்யும் நிறுவனங்களும், அரசும், இந்தியாவில் கால்பந்தை மேம்படுத்த இவ்வளவு செலவிட்டிருந்தால், இங்கேயும் மெஸ்ஸிகள் உருவாகி இருப்பார்கள். உலக தரவரிசையில் 142-வது இடத்தில் இருக்க மாட்டோம். கால்பந்து வளராததற்கு கிரிக்கெட்டை மட்டுமே குறை கூறாமல், வேறு வழியில் சிந்திக்க வேண்டியது இன்றைய தேவை. உங்க கருத்து?

error: Content is protected !!