India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசியைச் சேர்ந்த பீடிச்சுற்றும் தொழிலாளியின் மகள் ஸ்ரீமதி குரூப்-1 தேர்வில் முதலிடம் பிடித்துள்ளார். தமிழக அரசில் காலியாக உள்ள குரூப் 1 அளவிலான 95 பணி இடங்களில் அவர், துணை ஆட்சியர், டி.எஸ்.பி., பதவிகளில் ஏதேனும் ஒன்றில் அதிகாரியாகப் பொறுப்பேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தனது விடாமுயற்சியால் 3ஆவது முறையாக தேர்வெழுதி வென்ற இவர், நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்றவர் குறிப்பிடத்தக்கது.
அமலாக்கத்துறையின் அடவடித்தனமான செயல்பாட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி விஷால் கோக்னெ கண்டனம் தெரிவித்துள்ளார். ED-க்கு எதிரான வழக்கு ஒன்றை விசாரித்த நீதிபதி, சாமானியர்களை துன்புறுத்துவதை எந்த விதத்திலும் ED நியாயப்படுத்த முடியாது என்ற அவர், நீதிமன்றத்திற்கும், சட்டத்திற்கும் பதில் சொல்ல வேண்டிய கடமை அமலாக்கத்துறைக்கு உள்ளது என்று சாடினார்.
கட்சியின் சின்னத்தை சுயேச்சைகளுக்கு ஒதுக்கியதை எதிர்த்து ஜனசேனா கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. அக்கட்சியின் சின்னமான கண்ணாடி டம்ளர் சின்னத்தை ஜனசேனா போட்டியிடாத தொகுதிகளில் சுயேச்சைகளுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் ஆணையம் இன்று பதிலளிக்க உள்ளது. பாஜக கூட்டணியில் அக்கட்சி, 21 சட்டப்பேரவை மற்றும் 2 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடுகிறது.
தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு அரசியல் கட்சிகள் தண்ணீர் பந்தல் திறக்க தடையில்லை என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார். தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தும் நிலையில், அரசியல் கட்சிகள் மாநிலம் முழுவதும் தண்ணீர் பந்தல் அமைப்பது வழக்கம். இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றி தண்ணீர் பந்தல் அமைக்கவும், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அதனைக் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தமிழர்கள் பெயர்கள் இடம் பெறாதது ஏமாற்றமளிப்பதாக நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். தமிழக வீரர் நடராஜன் டெத் ஓவர்களில் யாக்கர்களால் எதிரணியை நிலைகுலையச் செய்வதை தனிப்பட்ட முறையில் தான் விரும்புவதாக கூறிய அவர், இந்திய அணியில் அவர் இடம் பெறாதது வருத்தமளிப்பதாக தெரிவித்தார். வாய்ப்பு இருப்பின் அவரைத் தேர்வு செய்வது குறித்து மறுபரிசீலனை செய்யவும் வலியுறுத்தினார்.
இந்தியாவில் சென்னை மாநகரில் 1923ஆம் ஆண்டில் மெரீனா கடற்கரை பகுதியில் முதன்முதலில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. தென் கிழக்காசியாவின் முதல் தொழிற்சங்கமான சென்னை தொழிலாளர் சங்கமானது, பொதுவுடைமைப் போராளி சிங்காரவேலர் தலைமையில் ஆங்கிலேயே அரசின் தடையை மீறி பேரணி & மாநாடு நடத்தி கொண்டாடியது. 10,000 பேர் கூடிய அந்நிகழ்வில், 8 மணி நேர வேலை, சிறந்த பணியிட நிலைமை போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தேர்தலில் I.N.D.I.A. கூட்டணி பெரும்பான்மையை நோக்கி செல்வதை உணர்ந்த மோடி, விரக்தியடைந்துள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். காங்., இந்துக்களின் சொத்துக்களை திருடி, அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்பவர்களுக்கு கொடுத்துவிடும் என பிரதமர் கூறுவதாகக் குறிப்பிட்ட அவர், முஸ்லிம்கள் மட்டும்தான் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்கிறார்களா? எனக் கேள்வி எழுப்பி, தனக்கும் 5 பிள்ளைகள் இருப்பதாகத் தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தில் உள்ள காங்கேசன்துறை துறைமுகத்தை இந்தியா நிதியுதவி உடன் புதுப்பிக்க இலங்கை அரசு முடிவெடுத்துள்ளது. 16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இத்துறைமுகத்தை புதுப்பிக்கும் திட்டத்திற்கு மொத்தம் ₹510 கோடி தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது இத்திட்டத்தை பொது – தனியார் கூட்டாண்மை முறையில் செயல்படுத்த இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
சனிப்பெயர்ச்சியைப் போல் குருப்பெயர்ச்சியும் முக்கியத்துவம் பெறுவதால், குருபகவானுக்கான சிறப்பு வாய்ந்த கோவில்கள் மட்டுமின்றி நவக்கிரகங்கள் உள்ள அனைத்துக் கோவில்களிலும் வழிபாடு செய்யலாம். குரு பகவானை மஞ்சள் துணி, சுண்டல், வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து வழிபட்டால் நன்மை கிடைக்கும். இன்று தட்சிணாமூர்த்தியை இரண்டாவதாக வழிபட வேண்டும். முதலில் நவகிரகங்களில் உள்ள குருபகவானைத்தான் வழிபட வேண்டும்.
பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 132 ரன்களைச் எடுத்தது. அந்த அணியின் ஹீலி மேத்யூஸ் 68 ரன்கள் எடுத்தார். அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 3-0 என்ற கணக்கில் WI தொடரைக் கைப்பற்றியது.
Sorry, no posts matched your criteria.