news

News May 1, 2024

தேர்தல் ஆணையத்தை எதிர்த்து ஜனசேனா வழக்கு

image

கட்சியின் சின்னத்தை சுயேச்சைகளுக்கு ஒதுக்கியதை எதிர்த்து ஜனசேனா கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. அக்கட்சியின் சின்னமான கண்ணாடி டம்ளர் சின்னத்தை ஜனசேனா போட்டியிடாத தொகுதிகளில் சுயேச்சைகளுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் ஆணையம் இன்று பதிலளிக்க உள்ளது. பாஜக கூட்டணியில் அக்கட்சி, 21 சட்டப்பேரவை மற்றும் 2 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடுகிறது.

News May 1, 2024

தண்ணீர் பந்தல் திறக்க தடையில்லை

image

தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு அரசியல் கட்சிகள் தண்ணீர் பந்தல் திறக்க தடையில்லை என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார். தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தும் நிலையில், அரசியல் கட்சிகள் மாநிலம் முழுவதும் தண்ணீர் பந்தல் அமைப்பது வழக்கம். இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றி தண்ணீர் பந்தல் அமைக்கவும், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அதனைக் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

News May 1, 2024

நடராஜன் இடம்பெறாதது வருத்தம்

image

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தமிழர்கள் பெயர்கள் இடம் பெறாதது ஏமாற்றமளிப்பதாக நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். தமிழக வீரர் நடராஜன் டெத் ஓவர்களில் யாக்கர்களால் எதிரணியை நிலைகுலையச் செய்வதை தனிப்பட்ட முறையில் தான் விரும்புவதாக கூறிய அவர், இந்திய அணியில் அவர் இடம் பெறாதது வருத்தமளிப்பதாக தெரிவித்தார். வாய்ப்பு இருப்பின் அவரைத் தேர்வு செய்வது குறித்து மறுபரிசீலனை செய்யவும் வலியுறுத்தினார்.

News May 1, 2024

இந்தியாவில் முதன்முதலில் மே தினம் கொண்டாடிய சென்னை

image

இந்தியாவில் சென்னை மாநகரில் 1923ஆம் ஆண்டில் மெரீனா கடற்கரை பகுதியில் முதன்முதலில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. தென் கிழக்காசியாவின் முதல் தொழிற்சங்கமான சென்னை தொழிலாளர் சங்கமானது, பொதுவுடைமைப் போராளி சிங்காரவேலர் தலைமையில் ஆங்கிலேயே அரசின் தடையை மீறி பேரணி & மாநாடு நடத்தி கொண்டாடியது. 10,000 பேர் கூடிய அந்நிகழ்வில், 8 மணி நேர வேலை, சிறந்த பணியிட நிலைமை போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

News May 1, 2024

முஸ்லிம்களுக்கு மட்டும்தான் அதிக குழந்தைகளா?

image

தேர்தலில் I.N.D.I.A. கூட்டணி பெரும்பான்மையை நோக்கி செல்வதை உணர்ந்த மோடி, விரக்தியடைந்துள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். காங்., இந்துக்களின் சொத்துக்களை திருடி, அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்பவர்களுக்கு கொடுத்துவிடும் என பிரதமர் கூறுவதாகக் குறிப்பிட்ட அவர், முஸ்லிம்கள் மட்டும்தான் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்கிறார்களா? எனக் கேள்வி எழுப்பி, தனக்கும் 5 பிள்ளைகள் இருப்பதாகத் தெரிவித்தார்.

News May 1, 2024

இந்தியா வசமாகுமா இலங்கையின் துறைமுகம்?

image

வடக்கு மாகாணத்தில் உள்ள காங்கேசன்துறை துறைமுகத்தை இந்தியா நிதியுதவி உடன் புதுப்பிக்க இலங்கை அரசு முடிவெடுத்துள்ளது. 16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இத்துறைமுகத்தை புதுப்பிக்கும் திட்டத்திற்கு மொத்தம் ₹510 கோடி தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது இத்திட்டத்தை பொது – தனியார் கூட்டாண்மை முறையில் செயல்படுத்த இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

News May 1, 2024

குருப்பெயர்ச்சியன்று செய்ய வேண்டிய விஷயங்கள்

image

சனிப்பெயர்ச்சியைப் போல் குருப்பெயர்ச்சியும் முக்கியத்துவம் பெறுவதால், குருபகவானுக்கான சிறப்பு வாய்ந்த கோவில்கள் மட்டுமின்றி நவக்கிரகங்கள் உள்ள அனைத்துக் கோவில்களிலும் வழிபாடு செய்யலாம். குரு பகவானை மஞ்சள் துணி, சுண்டல், வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து வழிபட்டால் நன்மை கிடைக்கும். இன்று தட்சிணாமூர்த்தியை இரண்டாவதாக வழிபட வேண்டும். முதலில் நவகிரகங்களில் உள்ள குருபகவானைத்தான் வழிபட வேண்டும்.

News May 1, 2024

பாக்., எதிரான டி20: தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்

image

பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 132 ரன்களைச் எடுத்தது. அந்த அணியின் ஹீலி மேத்யூஸ் 68 ரன்கள் எடுத்தார். அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 3-0 என்ற கணக்கில் WI தொடரைக் கைப்பற்றியது.

News May 1, 2024

சட்டையை போல் கூட்டணியை மாற்றுகிறார்கள்

image

காங்கிரஸ் கூட்டணி குழப்பங்களின் மொத்த உருவமாக இருப்பதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். ஊழல் கட்சிகள் சட்டையை மாற்றுவது போல் தங்கள் கொள்கைகளையும் கூட்டணிகளையும் மாற்றிக்கொள்வதாக குற்றம் சாட்டிய அவர், அதன் ஒரு வெளிப்பாடாகவே ஐக்கிய முற்போக்கு கூட்டணி இன்றைக்கு INDIA கூட்டணியாக மாறி இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் எப்போதும் தெளிவான முடிவை எடுக்காது என்றார்.

News May 1, 2024

மாணவர்களை விழுங்கும் நீட் தேர்வு

image

நீட் தேர்வினால் தமிழ்நாட்டில் ஏற்படும் தொடர் மரணங்கள் குறித்து நாம் அறிவோம். அதன் தொடர்ச்சியாக, ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் அடுத்தடுத்து மாணவ மரணங்கள் ஏற்படுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 2023ஆம் ஆண்டில் மட்டும் அங்கு 25க்கும் அதிகமான மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். அரசியல் வேறுபாடுகளைக் கடந்து நீட் மரணங்களுக்கு அரசுகள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

error: Content is protected !!