News May 1, 2024

சட்டையை போல் கூட்டணியை மாற்றுகிறார்கள்

image

காங்கிரஸ் கூட்டணி குழப்பங்களின் மொத்த உருவமாக இருப்பதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். ஊழல் கட்சிகள் சட்டையை மாற்றுவது போல் தங்கள் கொள்கைகளையும் கூட்டணிகளையும் மாற்றிக்கொள்வதாக குற்றம் சாட்டிய அவர், அதன் ஒரு வெளிப்பாடாகவே ஐக்கிய முற்போக்கு கூட்டணி இன்றைக்கு INDIA கூட்டணியாக மாறி இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் எப்போதும் தெளிவான முடிவை எடுக்காது என்றார்.

Similar News

News December 15, 2025

கார்த்திகை மாத கடைசி சோமவார சங்காபிஷேகம்

image

அருப்புக்கோட்டையில் இன்று(டிச.15) அமுதவல்லியம்மன் சமேத அமுதலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தீபதூப ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அமுதலிங்கேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

News December 15, 2025

BREAKING: அறிவித்தார் செங்கோட்டையன்

image

வரலாறு படைக்கும் அளவிற்கு ஈரோட்டில் விஜய்யின் பரப்புரை கூட்டம் நடைபெறும் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். வரும் 18-ம் தேதி காலை 11 முதல் மதியம் 1 மணிக்குள் கூட்டம் நடத்தப்படும் எனவும், குடிநீர், ஆம்புலன்ஸ் என அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியோர்கள் கூட்டத்திற்கு வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

News December 15, 2025

IPL: அதிக விலைக்கு வாங்கப்பட்ட டாப் 10 வீரர்கள்

image

திறமையான வீரர்களை எந்த விலை கொடுத்தேனும் எடுத்துவிட வேண்டும் என IPL அணிகள் முனைப்பு காட்டும். அந்த வகையில், IPL ஏலத்தில் அதிகம் தொகைக்கு வாங்கப்பட்ட இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்களின் போட்டோக்களையும் தொகையையும் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!