India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாஜக தன்னைக் கண்டு அஞ்சுவதாக டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அரியானா மாநிலம் குருஷேத்ராவில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், மக்களவைத் தேர்தலுக்கு பிரசாரம் செய்யக் கூடாது என்பதற்காகவே கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டதாக கூறினார். தன்னைக் கண்டு பாஜக அஞ்சுவதே இதற்கு காரணம் என்றும் கெஜ்ரிவால் குறிப்பிட்டார்.
சூரியனில் நிகழ்ந்த மாற்றத்தை ஆதித்யா L1 விண்கலம் புகைப்படமாக எடுத்து அதனை பூமிக்கு அனுப்பியுள்ளது. சூரியனின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக, இஸ்ரோ சார்பில் கடந்த ஆண்டு ஆதித்யா L1 விண்கலம் அனுப்பப்பட்டது. இந்த விண்கலம், தனது பணியை சிறப்பாக செய்து வரும் சூழலில் மே 10-12 வரை சூரியனில் ஏற்பட்ட வெடிப்பை புகைப்படமாக எடுத்து அனுப்பியுள்ளது. இந்த தகவலை ISRO தனது X தளத்தில் பகிர்ந்துள்ளது.
லக்னோ அணிக்கு 209 ரன்களை இலக்காக நிர்ணயித்தது டெல்லி அணி. ஐபிஎல் தொடரின் 64ஆவது லீக் போட்டி டெல்லியில் நடைபெற்றது. டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய DC அதிரடியாக விளையாடியது. குறிப்பாக, அபிஷேக் 58, ஸ்டப்ஸ் 57, ஹோப் 38, பண்ட் 33 ரன்களை விளாசியதால் DC அணி 208/4 ரன்களை குவித்தது. LSG தரப்பில், நவீன் உல்-ஹக் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
நாமக்கல் கோழிப் பண்ணைகளில், முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து, ஒரு முட்டை ₹5.65ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பறவைக் காய்ச்சல் எதிரொலியால் முட்டை விலை சரிவைக் கண்ட நிலையில், தற்போது மீண்டும் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. அந்த வகையில், மொத்த கொள்முதல் விலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 70 காசுகள் முட்டை விலை உயர்ந்துள்ளது. சில்லறை விலையில் ஒரு முட்டை ₹6 முதல் ₹6.50 வரை விற்பனையாகிறது.
ஐபிஎல் புள்ளி பட்டியலில் 5ஆம் இடத்தில் உள்ள ஆர்சிபி அணி, வரும் 18ஆம் தேதி சிஎஸ்கே அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியில் 18.1 ஓவருக்குள் 18 ரன் வித்தியாசத்தில் ஆர்சிபி வென்றால்தான் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும். ஆர்சிபி வீரர் கோலியின் ஜெர்சி எண்ணும் 18. இதுபோல ஆர்சிபியை சுற்றிலும் 18ஆம் எண் அதிக முக்கியத்துவம் பெறுவது கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நடிகை கங்கனா ரனாவத், தனக்கு ₹91.50 கோடி சொத்துக்கள் இருப்பதாக பிரமாணப் பாத்திரத்தில் தெரிவித்துள்ளார். அதில், ₹3 கோடி மதிப்பில் 6 கிலோ தங்கம், 60 கிலோ வெள்ளி மற்றும் வைர நகைகள் இருப்பதாகவும், ₹28.73 கோடி அசையும் மற்றும் ₹62.92 கோடி அசையா சொத்துகள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ₹17.38 கோடி கடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சேலம், விருதுநகர், நீலகிரி, தருமபுரி, தி.மலை மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே அறிவித்திருந்த சூழலில், தற்போது பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களில் சாலைகள், தெருக்களில் நீர் தேங்கியுள்ளது. பாதுகாப்பு காரணத்திற்காக சில இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. உங்கள் மாவட்டத்தில் மழையா?
தனது கோடீஸ்வர கணவர், அவருடன் வசிக்க வீட்டு வாடகை கேட்பதாக மனைவி ஒருவர் வினோத புகார் தெரிவித்துள்ளார். இணையதளத்தில் பெண் ஒருவர் வெளியிட்ட பதிவில், கோல்ப், போட்டிங் என தன் கணவர் சொகுசாக வாழ்வதாகவும், தன்னை விட்டுவிட்டு சுற்றுலா செல்வதாகவும், ஆனால் தாம் பல மணி நேரம் வீட்டு வேலை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதை கண்ட நெட்டிசன்கள், அவரின் கணவரை விமர்சிக்கின்றனர்.
தேர்தலில் போட்டியிட வேட்பாளர் இல்லாமல் காங்கிரஸ் தவிப்பதாக மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார். மத்தியில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைப்போம் என்று காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி தெரிவித்து வருகிறது. இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த மோகன் யாதவ், வேட்பாளர்களை தேடி அலையும் நிலையில் காங்கிரஸ் உள்ளது, அப்படியிருக்கையில் எப்படி ஆட்சியமைக்கும்? என்றார்.
முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, மே 17 – 19 வரை சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மே 17இல் 555, மே 18இல் 645 மற்றும் மே 19ஆம் தேதி 280 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசுப் போக்குவரத்துக் கழகம் கூறியுள்ளது.
Sorry, no posts matched your criteria.