News May 14, 2024
3 நாட்களுக்கு சிறப்புப் பேருந்து

முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, மே 17 – 19 வரை சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மே 17இல் 555, மே 18இல் 645 மற்றும் மே 19ஆம் தேதி 280 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசுப் போக்குவரத்துக் கழகம் கூறியுள்ளது.
Similar News
News December 8, 2025
BREAKING: இபிஎஸ்-க்கு அடுத்த அதிர்ச்சி

அதிமுக பொதுச்செயலாளராக EPS தேர்வானதை எதிர்த்த மனு ஐகோர்ட்டில் நிராகரிக்கப்பட்ட நிலையில், SC-ல் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. கட்சியின் முதன்மை உறுப்பினர்களால் நேரடியாக தேர்வு செய்வதற்கு பதிலாக பொதுக்குழுவால் EPS தேர்வானதை எதிர்த்து சூரியமூர்த்தி என்பவர் இவ்வழக்கை தொடர்ந்திருந்தார். பொதுச்செயலாளர் வழக்கு முடிந்துவிட்டதாக நினைத்திருந்த EPS-க்கு, மேல்முறையீடு மீண்டும் தலைவலியை தந்துள்ளது.
News December 8, 2025
சண்டை போடாதீங்க கம்பீர்.. Ex. வீரரின் அட்வைஸ்!

SA ODI தொடருக்கு பின் நடந்த பிரஸ் மீட்டில் இந்திய அணியின் கோச் கம்பீர், சரவெடியாக விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். இப்படி ஒருவரை விமர்சிப்பது, கம்பீர் தன் மீதான விமர்சனத்திற்கு இடமளிப்பது போல் உள்ளதாக ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். டீம் தோற்றால் அதற்கு கம்பீரை மட்டுமே குறை சொல்ல முடியாது என கூறிய அவர், இத்தனை சண்டைகளில் கம்பீர் ஈடுபட வேண்டியதில்லை எனவும் அட்வைஸ் செய்தார்.
News December 8, 2025
நீதி வென்றதாக நடிகர் திலீப் கண்ணீர்

பிரபல நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதி வென்றுள்ளதாக <<18502283>>வழக்கில் இருந்து விடுதலை<<>> செய்யப்பட்ட நடிகர் திலீப் உணர்ச்சி பொங்க கூறியுள்ளார். எர்ணாகுளத்தில் பேசிய அவர், பொய்யான வழக்கால் சினிமாவில் தனது புகழ், நற்பெயரை சீர்குலைக்க நினைத்தவர்களின் எண்ணம் பொய்யாகிவிட்டது என்றார். மேலும், இந்த வழக்கிற்காக கடந்த 9 ஆண்டுகளாக தனக்கு துணை நின்ற சினிமா, சட்ட நிபுணர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.


