News May 14, 2024
லக்னோ அணிக்கு 209 ரன்கள் இலக்கு

லக்னோ அணிக்கு 209 ரன்களை இலக்காக நிர்ணயித்தது டெல்லி அணி. ஐபிஎல் தொடரின் 64ஆவது லீக் போட்டி டெல்லியில் நடைபெற்றது. டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய DC அதிரடியாக விளையாடியது. குறிப்பாக, அபிஷேக் 58, ஸ்டப்ஸ் 57, ஹோப் 38, பண்ட் 33 ரன்களை விளாசியதால் DC அணி 208/4 ரன்களை குவித்தது. LSG தரப்பில், நவீன் உல்-ஹக் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Similar News
News December 10, 2025
TN-ல் வாக்குச்சாவடிகள் 75,035 ஆக உயர்வு

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளன. ஏற்கெனவே TN-ல் 68,467 வாக்குச்சாவடிகள் உள்ள நிலையில், தற்போது நடைபெற்று வரும் SIR பணிகளின் ஒரு பகுதியாக, கூடுதலாக 6,568 வாக்குச்சாவடிகள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், 2,509 வாக்குச்சாவடிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் TN தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார்.
News December 10, 2025
‘கைதி 2’ டிராப் ஆனதா?

LCU யுனிவர்ஸில் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்த படம் ‘கைதி 2’. கூலி-க்கு பிறகு ‘கைதி 2’ பணிகளை லோகேஷ் தொடங்குவார் என கூறப்பட்டது. ஆனால் அவர், டோலிவுட் பக்கம் கவனத்தை திருப்பி அல்லு அர்ஜுன், பிரபாஸிடம் கதை சொல்லியுள்ளார். இந்நிலையில் கார்த்தியிடம் ‘கைதி 2’ அப்டேட் கேட்கப்பட்டது. அவரோ, அதைப்பற்றி தனக்கு எந்த ஐடியாவும் இல்லை என கூறியுள்ளார். இதனால் படம் டிராப் ஆகிவிட்டதா என்ற கேள்வி எழுகிறது.
News December 10, 2025
தமிழகம் முழுவதும் முடங்கும்.. அறிவிப்பு வெளியானது

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, டிச.12-ல் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக டிட்டோஜாக் அமைப்பு அறிவித்துள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் அரசு அலுவல் பணிகளில் தொய்வு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில், இவ்வாறு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று தலைமைச் செயலாளர் எச்சரித்துள்ளார்.


