India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
லக்னோவுக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், டெல்லி வீரர் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் புதிய சாதனை படைத்துள்ளார். 3 Four, 4 Six என விளாசிய அவர், 25 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார். இதனால் நடப்பு ஐபிஎல் தொடரில், கடைசி 5 ஓவர்களில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார்.
▶ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (DC) – 252 ▶தினேஷ் கார்த்திக் (RCB)- 226 ▶நிகோலஸ் பூரன் (LSG) – 211 ▶டிம் டேவிட் (MI) – 205.
தனிப்பட்ட வாழ்க்கைக்குள் நுழைந்து, தரம் தாழ்த்தி பேசுவது ஏற்புடையது அல்ல என்று ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். தனது மனைவி சைந்தவியை பிரிந்தது குறித்து அறிக்கை வெளியிட்ட அவர், அனைவரிடமும் கலந்தாலோசித்து, இருவரும் பரஸ்பரமாக தான் பிரிந்தோம் என்றும், ஆதங்கமான விமர்சனங்கள் எங்கள் மனதை காயப்படுத்துகிறது என்பதால், தனி மனிதனின் உணர்வுக்கு மதிப்பளியுங்கள் என்றும் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். தற்போது, அவரது தோழி ஒருவரது பெயரும் சமூக வலைதளங்களில் அடிபடுகிறது. சவுக்கு சங்கர், அவரது பத்திரிகையாளர் தோழிக்கு தி.நகரில் பல கோடி மதிப்புள்ள வீட்டினை வாங்கிக் கொடுத்திருப்பதாக சவுக்கு எதிர்ப்பாளர்கள் பேசி வருகின்றனர். இது உண்மையா என்பது போலீஸ் விசாரணையில்தான் தெரியவரும்.
கனடாவில் வசிக்கும் பிற நாட்டினர் தங்கள் பெற்றோரை அழைத்து வர ‘சூப்பர் விசா’ திட்டத்தை அந்நாட்டு அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டி கனடாவில் வசிக்கும் தங்கள் குழந்தைகளுடன் 5 ஆண்டுகள் வரை வசிக்க முடியும். கனடா சென்ற பிறகு, இந்த விசாவின் காலவரம்பை நீட்டிக்க முடியும். இத்திட்டத்தின் கீழ் 2020ஆம் ஆண்டில் விண்ணப்பித்தவர்களுக்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
சிங்கப்பூரில் தற்போது துணை பிரதமராக பதவி வகிக்கும் லாரன்ஸ் வோங் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளார். இந்நிலையில், அவரது புதிய அமைச்சரவையில் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த முரளி பிள்ளை சட்டம் & போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அமைச்சர்களாக இருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவியன் பாலகிருஷ்ணன், சண்முகம், இந்திராணி ராஜா ஆகியோரும் அமைச்சரவையில் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பல்கலைக்கழகங்களில், இளநிலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கான CUET நுழைவுத் தோ்வு இன்று தொடங்கியது. நாடு முழுவதும் 380 நகரங்களிலும், வெளிநாடுகளில் 26 இடங்களிலும் நடைபெறும் இத்தேர்வுக்கு, 13 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். தேர்வுகள் ஒரே நாளில் காலை 10-11, மதியம் 12.15-1, 3-3.45 என 3 பகுதிகளாக கணினி அடிப்படையில் மற்றும் நேரடி எழுத்துத் தோ்வு முறைகளில் நடைபெறுகிறது.
I.N.D.I.A கூட்டணி ஆட்சியமைத்தால் ஏழைகளுக்கு 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். லக்னோ பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், இந்த வாக்குறுதியை வழங்கினார். ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ₹1 லட்சம் வழங்கப்படும் என்ற காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதி வாக்காளர்களை ஈர்த்துவரும் நிலையில், இலவச அரிசி வாக்குறுதியையும் காங்கிரஸ் அளித்துள்ளது.
மோடியின் அரசியல் பயணம் முஸ்லிம்களுக்கு எதிரான அரசியலை அடிப்படையாக கொண்டது என ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் ஓவைசி குற்றம்சாட்டியுள்ளார். ஊடுருவல்காரர்கள் என முஸ்லிம்களை கூறவில்லை என பிரதமர் கூறியிருந்த நிலையில், இந்த விளக்கத்தைக் கொடுக்க இவ்வளவு தாமதமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் மோடியும், பாஜகவும் எண்ணற்ற பொய்களை பரப்பி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
‘G.O.A.T’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை ₹55 கோடிக்கு வாங்க சன் டிவி பல்வேறு கெடுபிடிகளை விதித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் அரசியல் சார்ந்த காட்சிகள் இருக்கக் கூடாது எனவும், 2 மணி நேர பேட்டிக்கு விஜய் நேரம் ஒதுக்கித் தர வேண்டும் என்றும் கூறியதால், படத்தை ஜீ நிறுவனத்திற்கு படக்குழு கைமாற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அருகே குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக இன்று காலை அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். உடனடியாக, அங்கு விரைந்து சென்ற போலீசார், அதிகாரிகள் தீவிர விசாரணையை தொடங்கினர். இதற்காக, கிணற்றில் இருந்த நீரை அகற்றி உள்ளே இறங்கி சோதனை மேற்கொண்டனர். இதில், கிணற்றிலிருந்தது மனித மலம் அல்ல, தேனடை என்பது தெரியவந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.