News May 15, 2024
கனடாவில் ‘சூப்பர் விசா’ திட்டம் அறிமுகம்

கனடாவில் வசிக்கும் பிற நாட்டினர் தங்கள் பெற்றோரை அழைத்து வர ‘சூப்பர் விசா’ திட்டத்தை அந்நாட்டு அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டி கனடாவில் வசிக்கும் தங்கள் குழந்தைகளுடன் 5 ஆண்டுகள் வரை வசிக்க முடியும். கனடா சென்ற பிறகு, இந்த விசாவின் காலவரம்பை நீட்டிக்க முடியும். இத்திட்டத்தின் கீழ் 2020ஆம் ஆண்டில் விண்ணப்பித்தவர்களுக்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
Similar News
News December 17, 2025
கண்ணதாசன் பொன்மொழிகள்

*நிம்மதி என்பது பிறர் கொடுப்பது அல்ல நாமே ஏற்படுத்திக் கொள்வதுதான் *கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம். *முதலில் யார் மீதாவது குற்றம் சாட்ட விரும்பினாள் உன் மீதே குற்றம்சாட்டிப் பழகு *உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும்; உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும். *கர்மத்தை செய்ய முடியாதவனும், தர்மத்தை காக்க முடியாதவனும் வாழ்வதில் அர்த்தமில்லை
News December 17, 2025
3 மாதங்களில் இந்தியாவுக்கு வந்த 3-வது தாலிபன் அமைச்சர்

ஆப்கானிஸ்தானின் சுகாதாரத்துறை அமைச்சர் நூர் ஜலால் அரசுமுறை பயணமாக நேற்று டெல்லி வந்தார். இந்தியா – ஆப்கன் இடையே சுகாதாரத் துறையில் உறவை வலுப்படுத்தும் நோக்கத்தில் அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். மூன்று மாதங்களில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்ட மூன்றாவது தலிபான் அமைச்சர் இவர் என்பது கவனிக்கத்தக்கது. பாகிஸ்தானுடன் மோதல் போக்கை கையாளும் ஆப்கான் இந்தியாவுடனான தனது உறவை வலிப்படுத்தி வருகிறது.
News December 17, 2025
கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 உணவுகள்

இந்தியாவில் 2025-ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட உணவுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் நாம் எதிர்பார்க்காத பல உணவுகள் இடம்பெற்றுள்ளன. தென்னிந்திய உணவுகளான இட்லி, கொழுக்கட்டை, களி ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. மேலே, டாப் 10-ல் இடம்பிடித்த உணவுகளை போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் உங்களுக்கு பிடித்தது எது? SHARE.


