news

News May 15, 2024

டி20 தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்

image

அயர்லாந்து எதிரான மூன்றாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முதலில் களமிறங்கிய அயர்லாந்து 178/7 ரன்களைச் சேர்த்தது. சிறப்பாக பந்துவீசிய ஷாஹின் அஃப்ரிடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் ஆடத்தொடங்கிய பாகிஸ்தான், 17 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து இலக்கை எட்டியது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் 2-1 என்ற கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றியது.

News May 15, 2024

இன்றைய பொன்மொழிகள்

image

➤ தகுதிக்கு மீறி வாங்கப்படும் கடனுக்கு வட்டியாக மானத்தையும் கட்ட வேண்டியிருக்கும்.
➤ சில நேரங்களில் குள்ள நரியின் புத்தி கொஞ்சமாவது இருக்க வேண்டும். குழி பறிக்க அல்ல குழியில் விழாமல் இருக்க.
➤ மனிதனுக்கு பிரச்னை இல்லை என்றால், கடவுளுக்கு அர்ச்சனை இல்லை.
➤ ஒருபோதும் உங்களை நியாயப்படுத்திக் கொள்ள பிறரை காயப்படுத்தி விடாதீர்கள்.
➤ கடின உழைப்பால் தடைகள் அனைத்தையும் வெல்ல முடியும்.

News May 15, 2024

இவிஎம் பாதுகாப்பு அறையில் திடீர் மின்தடை

image

திருப்பூரில் இவிஎம் இயந்திரம் வைக்கப்பட்டிருந்த அறையில் மின்சாரம் தடைபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பவானி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் இந்த மின்தடை ஏற்பட்டது. 10 நிமிடங்கள் வரை மின் தடை நீடித்த நிலையில், அதை அதிகாரிகள் சரி செய்தனர். ஈரோடு, நெல்லை தொகுதியிலும் இதே பிரச்னை சில நாள்களுக்கு முன் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

News May 15, 2024

இல்லறம் சிறக்க தம்பதிகள் செய்ய வேண்டியவை…

image

கணவன் – மனைவிக்குள் நடக்கும் ஊடல்களை சிறிய சண்டையாக இருக்கும்போதே அதை சரிசெய்து விட முயற்சி செய்தால் பனி போல விலகிவிடும். அது தொடரும் போது பெரிய பிரச்னையில் போய் நிற்கும். ஏனெனில், எல்லா வகை சண்டைகளுக்குப் பின்னாலும் சில பொதுவான காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. எனவே, தம்பதிகள் நடந்ததைப் பற்றி பேசி, வாக்குவாதம் செய்யாமல் அதை கடந்து போக முயற்சிப்பதே சிறப்பானதாக இருக்கும்.

News May 15, 2024

வரலாற்றில் இன்று

image

➤221 – சீன ராணுவத் தலைவர் லியூ பெய் தன்னைப் பேரரசராக அறிவித்தார்.
➤1648 – வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
➤1796 – நெப்போலியனின் படைகள் இத்தாலியின் மிலன் நகரைக் கைப்பற்றின.
➤1851 – நான்காவது ராமா தாய்லாந்தின் மன்னராக முடி சூடினார்.
➤2013 – ஈராக்கில் ஏற்பட்ட வன்முறைகளில் 389 பேர் கொல்லப்பட்டனர்.

News May 15, 2024

சல்மான் கான் வீட்டில் தாக்குதல், மேலும் ஒருவர் கைது

image

நடிகர் சல்மான்கான் வீடு மீது துப்பாக்கியால் சுட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை பாந்திராவில் உள்ள சல்மான் வீட்டின் மீது துப்பாக்கியால் சுட்ட விக்கி குப்தா, சாகர் பால் ஆகிய 2 பேரை ஏப்ரல் 16ஆம் தேதி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு துப்பாக்கியை வழங்கியதாக மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த சம்பவத்தில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News May 15, 2024

ஜெய் ஷாவுக்கு எல்லா தகுதியும் உள்ளது: அனுராக் தாக்கூர்

image

ஜெய் ஷாவுக்கு தகுதி இருப்பதால் தான், பிசிசிஐ செயலாளராக இருப்பதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். பிரபலமான ஒருவரின் மகனாக பிறப்பது குற்றம் அல்ல என்று கூறிய அவர், ஜெய் ஷா பதவியேற்ற பிறகு, கிரிக்கெட்டுக்காக பல நல்ல விஷயங்களை செய்திருப்பதாக பாராட்டினார். ஜெய் ஷாவுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், அதற்கு பாஜக தற்போது விளக்கமளித்துள்ளது.

News May 15, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

◾பால்: பொருட்பால்
◾அதிகாரம்: கேள்வி
◾குறள்: 418
கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.
◾விளக்கம்: இயற்கையாகவே கேட்கக்கூடிய காதுகளாக இருந்தாலும் அவை நல்லோர் உரைகளைக் கேட்க மறுத்தால் செவிட்டுக் காதுகள் என்றே கூறப்படும்

News May 15, 2024

சர்க்கரை நோயாளிகள் சின்ன வெங்காயம் சாப்பிடலாமா?

image

சின்ன வெங்காயத்தில் க்வேர்செடின் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகமா இருப்பதால், ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். மேலும், சின்ன வெங்காயத்தில் உள்ள அதிகமான நார்ச்சத்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவும். சின்ன வெங்காயம் சாப்பிடுறது சர்க்கரை நோயாளிகளுக்கு நிறைய நன்மைகள் தருகிறது ஆனால், எவ்வளவு சாப்பிடலாம், எப்படி சாப்பிடலாம் என்பதை மருத்துவரிடம் ஆலோசிக்கவும்.

News May 15, 2024

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சிறப்பாக ஆடுவார்

image

டி20 உலகக்கோப்பையில் ரோஹித் ஷர்மாவின் சிறப்பான ஆட்டம் வெளிப்படும் என கங்குலி தெரிவித்துள்ளார். ஐசிசி தொடர்களில் ரோஹித் சிறப்பாக செயல்படுவதாக கூறிய அவர், வருகிற டி20 உலகக் கோப்பையிலும் அது எதிரொலிக்கும் என்றார். நடப்பு ஐபிஎல் தொடரில் ரோஹித்தின் ஆட்டம் பெரிய அளவில் சிறப்பாக இல்லை. மேலும், டி20 உலகக் கோப்பைக்கு பிறகு, அவர் சர்வதேச டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!