News May 15, 2024
டி20 தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்

அயர்லாந்து எதிரான மூன்றாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முதலில் களமிறங்கிய அயர்லாந்து 178/7 ரன்களைச் சேர்த்தது. சிறப்பாக பந்துவீசிய ஷாஹின் அஃப்ரிடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் ஆடத்தொடங்கிய பாகிஸ்தான், 17 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து இலக்கை எட்டியது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் 2-1 என்ற கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றியது.
Similar News
News December 13, 2025
ICC போட்டிகள் ஜியோஸ்டாரில் ஒளிபரப்பாகும்

இந்தியாவில், ICC போட்டிகளை ஒளிபரப்புவதற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தில் இருந்து JioStar வெளியேறவில்லை என ICC தெரிவித்துள்ளது. $3 பில்லியன் நிதியிழப்பால், 2027 வரை போடப்பட்ட ஒப்பந்தத்தில் இருந்து Jiostar வெளியேறுவதாக தகவல் கசிந்தது. இது உண்மையல்ல என்றும், இந்தியாவில் ஐசிசி போட்டிகளை ஒளிபரப்புவதில் Jiostar உறுதியாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால், Jiostar வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News December 12, 2025
விமான சேவைகள் சீரானது: இண்டிகோ

FDTL விதிகளை பின்பற்ற முடியாமல் INDIGO, கடந்த ஒரு வாரத்தில் ஆயிரக்கணக்கான விமான சேவைகளை ரத்து செய்தது. இந்நிலையில் 138 நகரங்களை இணைக்கும் வகையில், இன்று 2,050 விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக INDIGO கூறியுள்ளது. தங்களது சேவை டிச.9 சீரடைந்துள்ளதாகவும், உரிய நேரத்திற்கு விமானங்கள் புறப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, DGCA உத்தரவினால் 10% சேவைகளை INDIGO குறைத்தது குறிப்பிடத்தக்கது.
News December 12, 2025
100 நாள் வேலை திட்டத்தின் பெயர் மாற்றம்

கிராமப்புற ஏழைகளுக்கு வேலை வாய்ப்பளிக்கும் வகையில், 2005-ல் தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் (NREGA) கொண்டு வரப்பட்டது. 2009-ல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் (MGNREGA) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், ‘பூஜ்ய பாபு கிராமின் ரோஸ்கர் யோஜனா’ (PBGRY) என்ற பெயர் மாற்றத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்திற்காக ₹1.51 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


