News May 15, 2024
டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சிறப்பாக ஆடுவார்

டி20 உலகக்கோப்பையில் ரோஹித் ஷர்மாவின் சிறப்பான ஆட்டம் வெளிப்படும் என கங்குலி தெரிவித்துள்ளார். ஐசிசி தொடர்களில் ரோஹித் சிறப்பாக செயல்படுவதாக கூறிய அவர், வருகிற டி20 உலகக் கோப்பையிலும் அது எதிரொலிக்கும் என்றார். நடப்பு ஐபிஎல் தொடரில் ரோஹித்தின் ஆட்டம் பெரிய அளவில் சிறப்பாக இல்லை. மேலும், டி20 உலகக் கோப்பைக்கு பிறகு, அவர் சர்வதேச டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News December 17, 2025
சிம்புவை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்?

இடையில் கொஞ்சம் சறுக்கினாலும், சிம்பு தனது Comeback-ஐ கச்சிதமாக பிளான் செய்து வருகிறார். வெற்றிமாறனுடன் ‘அரசன்’, அஸ்வத் மாரிமுத்துவுடன் ‘STR 51’ படங்களை முடித்தவுடன் அவர் ஏ.ஆர்.முருகதாஸுடன் இணையவுள்ளார் என கூறப்படுகிறது. ஆம், ‘மதராஸி’ படத்திற்கு பிறகு, அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கியுள்ள ஏ.ஆர்.முருகதாஸ், சிம்புவிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறாராம். எப்படி இருக்கும் இந்த காம்போ?
News December 17, 2025
திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்

சில நாள்களுக்கு முன், அதிமுக நிர்வாகிகள் அடுத்தடுத்து திமுகவில் இணைந்தது அரசியல் ரீதியாக பேசுபொருளாக மாறியது. இதற்கு பதிலடியாக தற்போது, திமுகவினரை அதிமுகவில் சேர்க்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பார் கே.கணேஷ்பாண்டி உள்பட 200-க்கும் மேற்பட்டோர், EX மினிஸ்டர் ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
News December 17, 2025
புது வாழ்வளித்த CSK-வுக்கு நன்றி.. நெகிழ்ந்த சர்பராஸ்!

2015-ல் குறைந்த வயதில் IPL-ல் விளையாடியவர்(17 வருடம் 177 நாள்கள்) என்ற பெருமையை பெற்ற சர்பராஸ் கான் பல ஏற்ற இறக்கங்களை கண்டவர். பல அணிகள் மாறி, Fitness இல்லை என்ற ஓரங்கட்டப்பட்டவர், உடல் எடையை குறைத்து 2025 SMAT தொடரில் அசத்தலான ஃபார்மில் உள்ளார். ஒரு சான்ஸ் கிடைக்காதா என காத்திருந்தவரை, CSK வாங்கியுள்ளது. இதனால், புது வாழ்வளித்த CSK-வுக்கு நன்றி’ என அவர் தெரிவித்துள்ளார்.


