News May 15, 2024
இன்றைய பொன்மொழிகள்

➤ தகுதிக்கு மீறி வாங்கப்படும் கடனுக்கு வட்டியாக மானத்தையும் கட்ட வேண்டியிருக்கும்.
➤ சில நேரங்களில் குள்ள நரியின் புத்தி கொஞ்சமாவது இருக்க வேண்டும். குழி பறிக்க அல்ல குழியில் விழாமல் இருக்க.
➤ மனிதனுக்கு பிரச்னை இல்லை என்றால், கடவுளுக்கு அர்ச்சனை இல்லை.
➤ ஒருபோதும் உங்களை நியாயப்படுத்திக் கொள்ள பிறரை காயப்படுத்தி விடாதீர்கள்.
➤ கடின உழைப்பால் தடைகள் அனைத்தையும் வெல்ல முடியும்.
Similar News
News December 6, 2025
இன்று ரேஸில் வெல்வாரா அஜித்குமார்?

மலேசியாவில் இன்று நடைபெறும் Michelin 12H கார் ரேஸிங்கில் அஜித்குமார் களமிறங்கவுள்ளார். இந்த ஆண்டில் ரேஸிங்கிலேயே முழுக்கவனமும் செலுத்தி வரும் அஜித், சில போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். இந்நிலையில், இன்றைய போட்டியிலும் அஜித் வெற்றி பெற வேண்டும் என நெட்டிசன்கள் வாழ்த்துகளை கூறி வருகின்றனர். இதனிடையே, ரேஸ் களத்தில் அஜித்தின் போட்டோஸ் வெளியாகி வைரலாகிறது.
News December 6, 2025
ஜீரண சக்தியை அதிகரிக்கும் மூலிகை தேநீர்!

உடலின் ரத்த ஓட்டத்தைத் துரிதப்படுத்தவும், ஜீரண சக்தியை அதிகரிக்கவும் சீமை சாமந்தி தேநீர் உதவும். ➤சாமந்திப்பூ இதழ்களை பிரித்து நன்கு காய வைக்கவும். ➤1 கப் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் 1 தேக்கரண்டி உலர்ந்த பூக்களை போடவும். ➤8- 10 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும். ➤அதை அடுப்பிலிருந்து இறக்கி, அதில் கொஞ்சம் தேன் கலந்து கொண்டால், சத்தான சீமை சாமந்தி தேநீர் ரெடி. SHARE THIS.
News December 6, 2025
சற்றுமுன்: மழை வெளுத்து வாங்கும்

டிட்வா புயல் எதிரொலியால், தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக கனமழை வெளுத்து வாங்கியது. பின், புயல் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழந்ததால், நேற்று சற்று மழை குறைந்தது. இந்நிலையில், கோவை, கடலூர், மயிலாடுதுறை, நாகை, தேனி, நீலகிரி, திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ( காலை 10 மணி வரை) மழை பெய்யக்கூடும் என்று IMD அலர்ட் கொடுத்துள்ளது.


