news

News May 15, 2024

ராகு தோஷம் இருப்பவர்கள் செல்ல வேண்டிய ஆலயம்

image

திருமணஞ்சேரி என்னும் திருத்தலம் திருமண தடை நீங்க வல்லது. இந்த புனித தலத்தில் பூஜை செய்து வழிபட்டால் திருமணம் விரைவில் கைகூடும் என்பது ஐதீகம். ஜாதகத்தில் ராகு தோஷம் இருந்தால் அவர்கள் இங்குள்ள ராகு பகவானுக்கு அபிஷேகம் செய்ய ராகு தோஷம் நீங்கும். மேலும் புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் கூட இந்த தலத்தில் வந்து திருக்குளத்தில் நீராடி ராகு பகவானை மனதார வழிபட விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும்.

News May 15, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤ தென் மாநிலங்களில் பாஜக அதிக இடத்தில் வெல்லும் – அமித் ஷா
➤ காங்கிரஸ் உருவாக்கியதை பாஜக அழித்து வருகிறது – பிரியங்கா
➤ பாஜக 400 இடங்களில் வெல்லும் – அன்புமணி
➤டெல்லி ஐடி அலுவலகத்தில் தீ விபத்து – ஒருவர் உயிரிழப்பு
➤இபிஎஸ் மீதான அவதூறு வழக்கு ஒத்திவைப்பு
➤ டெல்லிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி தோல்வி

News May 15, 2024

பிளே-ஆஃப் சுற்றை உறுதி செய்யுமா ராஜஸ்தான் அணி?

image

ஐபிஎல் தொடரில் இன்றைய 65ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான், பஞ்சாப் அணிகள் மோதவுள்ளன. ராஜஸ்தான் இதுவரை 12 போட்டிகளில் விளையாடி, 8 வெற்றி, 4 தோல்விகளுடன் 16 புள்ளிகளை பெற்று, புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வென்றால் அந்த அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும். இந்த ஐபிஎல் போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் பஞ்சாப், தொடரில் இருந்து ஏற்கனவே எலிமினேட் ஆகியுள்ளது.

News May 15, 2024

சுசித்ரா குற்றச்சாட்டுக்கு முன்னாள் கணவர் விளக்கம்

image

நடிகர் கார்த்திக் குமார் மீது அவரது முன்னாள் மனைவி சுசித்ரா பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். அதில், கார்த்திக் குமார் ஓரினச்சேர்க்கையாளர் என்றும், இதை திருமணமாகி 2 ஆண்டுகளுக்கு பின்பு கண்டுபிடித்ததாகவும் அவர் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள கார்த்திக் குமார், தான் ஓரினச்சேர்க்கையாளராக இருந்தால், அதற்காக வெட்கப்பட போவதில்லை, அது பெருமையான விஷயம் தான் என்றும் தெரிவித்துள்ளார்.

News May 15, 2024

இந்தியா அரையிறுதிக்கு செல்லும்

image

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் என கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தெரிவித்துள்ளார். இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு செல்லும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், ஆஸ்திரேலிய அணியை சந்திப்பது இந்திய அணிக்கு சவாலாக இருக்கும் என்றார். இந்த தொடர் அக்டோபர் 3 முதல் 20ஆம் தேதி வரை வங்க தேசத்தில் நடைபெற உள்ளன.

News May 15, 2024

79 தொகுதிகளில் மட்டுமே பாஜக வெல்லும்

image

நடந்து முடிந்த 4 கட்ட மக்களவைத் தேர்தலில் பாஜக 79 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மத்திய அரசின் உளவுத்துறை அதிகாரிகள் இதை பாஜகவிடமே கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுவரை 4 கட்டமாக 380 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது. ஆனால், பாஜக 79 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

News May 15, 2024

‘எலக்சன்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்

image

இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எலக்சன்’ படத்தில் விஜய்குமார், பிரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, ‘வத்திக்குச்சி’ திலீபன், நவகீதன், ஜார்ஜ் மரியம், நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த படம் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

News May 15, 2024

இன்றைய நல்ல நேரம்

image

மே – 15 | வைகாசி- 2
▶கிழமை: புதன்
▶நல்ல நேரம்: 09:30AM – 10:30AM, 4:30PM – 5:30PM
▶கெளரி நேரம்: 10:30 AM – 11:30 AM, 06:30 PM – 07:30 PM
▶ராகு காலம்: 12:00 PM – 01:30 PM
▶எமகண்டம்: 07:30 AM – 09:00 AM
▶குளிகை: 10:30 AM – 12:30 PM
▶சூலம்: வடக்கு
▶பரிகாரம்: பால்
▶ திதி : சூன்யம்

News May 15, 2024

சாலை விபத்தில் 4 நண்பர்கள் பலி

image

ஈசிஆர் பகுதியில் ஏற்பட்ட கார் விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கல்பாக்கம் அருகே வயலூர் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை ஓரமாக இருந்த மரத்தில் மோதியது. இந்த விபத்தில் வடபழனி, சூளை பகுதிகளை சேர்ந்த நண்பர்கள் பலியாகினர். இவர்கள் அனைவரும் பாண்டிச்சேரிக்கு சென்று திரும்பிய நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

News May 15, 2024

200 இடங்களை பாஜக தாண்டாது

image

மத்தியில் அடுத்த அரசாங்கத்தை INDIA கூட்டணி கட்சிகள் அமைக்கும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மோடி 3ஆவது முறையாக பிரதமர் பதவியில் அமர மாட்டார் என்று சவால் விடுத்த அவர், 300 இடங்களில் INDIA கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும் என்றார். பரப்புரைகளில் பிரதமர் மோடி பொய் கூறுவதை வாடிக்கையாக கொண்டுள்ளதாக விமர்சித்த அவர், 200 இடங்களில் மட்டுமே பாஜக வெற்றிபெறும் என்று சூளுரைத்தார்.

error: Content is protected !!