News May 15, 2024
சுசித்ரா குற்றச்சாட்டுக்கு முன்னாள் கணவர் விளக்கம்

நடிகர் கார்த்திக் குமார் மீது அவரது முன்னாள் மனைவி சுசித்ரா பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். அதில், கார்த்திக் குமார் ஓரினச்சேர்க்கையாளர் என்றும், இதை திருமணமாகி 2 ஆண்டுகளுக்கு பின்பு கண்டுபிடித்ததாகவும் அவர் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள கார்த்திக் குமார், தான் ஓரினச்சேர்க்கையாளராக இருந்தால், அதற்காக வெட்கப்பட போவதில்லை, அது பெருமையான விஷயம் தான் என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 16, 2025
அதிமுக முக்கிய நிர்வாகி ஜெகநாதன் காலமானார்

அதிமுக அம்மா பேரவை துணை செயலாளரும், நெல்லை மாநகராட்சி EX துணை மேயருமான P.ஜெகநாதன் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தென் மாவட்டங்களை சேர்ந்த அதிமுக EX அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் ஜெகநாதன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.
News December 16, 2025
காந்தி பெயரை நீக்குவதால் என்ன பயன்? பிரியங்கா

VB-G Ram G மசோதாவுக்கு பிரியங்கா காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மக்களவையில் இன்றைய விவாதத்தில் இதுகுறித்து பேசிய அவர், காந்தி பெயரை மாற்றுவதால் என்ன பயன் என கேள்வி எழுப்பினார். முன்பு, <<18578101>>MGNREGA<<>>-விற்கு 90% மத்திய அரசு நிதி கொடுத்தது. ஆனால், தற்போதைய VB-G Ram G-ன் படி 40% மட்டுமே மத்திய அரசு கொடுக்கும். இது அதிகாரத்தை மையப்படுத்தும் முயற்சி என்றும் பிரியங்கா விமர்சித்தார்.
News December 16, 2025
ஜெயிலர் 2 படத்தில் நடிக்கிறாரா காஞ்சனா நடிகை?

‘ஜெயிலர் 2’ படத்திற்காக பாலிவுட் நடிகை நோரா ஃபடேஹி சென்னையில் முகாமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 8 நாள்கள் இப்படத்தில் நடிக்கவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், அவர் ‘காஞ்சனா 4’ படத்திலும் நடித்து வருகிறார். எனவே, அவர் இவ்விரண்டில் எந்த படத்திற்காக சென்னையில் உள்ளார் என்பது குறித்த உறுதியான தகவல்கள் இல்லை. ஏற்கெனவே மல்டி ஸ்டார்களுடன் <<18397000>>ஜெயிலர் 2<<>> தயாராகி வருகிறது.


