news

News June 17, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

*முதல்வர் ஸ்டாலினை பார்த்து பிரதமர் மோடி பயந்துதான் ஆக வேண்டும் – ஆ.ராசா
*தேர்தலில் தனித்து போட்டியிட திமுகவுக்கு தைரியம் இல்லை – வானதி சீனிவாசன்
*புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் – அர்ஜுன் ராம் மேக்வால்
*இந்தியாவின் ஏற்றுமதி கடந்த மே மாதத்தில் 3,813 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
*T20 WC: IRE அணிக்கு எதிரான 36ஆவது லீக் போட்டியில், PAK அணி வென்றது.

News June 17, 2024

T20 WC: அயர்லாந்தை வீழ்த்திய பாகிஸ்தான் அணி

image

டி20 உலகக் கோப்பை தொடரின் 36ஆவது லீக் போட்டியில், IRE அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, PAK அணி வென்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த IRE அணி 20 ஓவர்கள் முடிவில், 106 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கிய PAK அணி, அடுத்ததடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும், பொறுமையாக விளையாடி இறுதியில் 111 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது.

News June 17, 2024

‘விடாமுயற்சி’ அப்டேட் கொடுத்த அர்ஜுன்

image

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘விடாமுயற்சி’. சில வாரங்களுக்கு முன்னர் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில், விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படும் எனத் தகவல் வெளியானது. இந்நிலையில், இப்படத்தில் நடித்துவரும் அர்ஜுன், இம்மாத இறுதியில் படப்பிடிப்பு மீண்டும் தொடங்க உள்ளது என்றும், இன்னும் 20% படப்பிடிப்பே பாக்கியுள்ளது என்றும் கூறியுள்ளார்.

News June 16, 2024

ஆடு, மாடுகளை போல் மக்களை அடைத்து வைக்க முடியுமா?

image

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போது மக்களை ஆடு, மாடுகளைப் போல திமுக அடைத்து வைத்ததாக இபிஎஸ் குற்றம் சாட்டியிருந்தார். இதன் காரணமாகவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் முத்துசாமி, இந்தக் காலத்தில் யாராவது மக்களை அடைத்து வைக்க முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஈரோடு கிழக்கில் முறைகேடு ஏதும் நடக்கவில்லை என்றார்.

News June 16, 2024

12 ராசிகளுக்கான பலன்கள்

image

* மேஷம் – நிதி உதவி கிடைக்கும்
*ரிஷபம் – வரவு அதிகரிக்கும்
*மிதுனம் – சினம் உண்டாகும்
*கடகம் – அசதி ஏற்படும்
*சிம்மம் – ஆக்கப்பூர்வமான நாள்
*கன்னி – சாதனை புரிவீர்கள்
*துலாம் – நிம்மதி கிடைக்கும்
*விருச்சிகம் – நற்செயல் செய்யும் நாள்
*தனுசு – சோர்வு உண்டாகும்
*மகரம் – பரிவு ஏற்படும் *கும்பம் – சாந்தமான நாள் *மீனம் – நிறைவான நாள்

News June 16, 2024

ஸ்டாலினை பார்த்து மோடி பயந்தாக வேண்டும்: ஆ.ராசா

image

முதல்வர் ஸ்டாலினை பார்த்து பிரதமர் மோடி பயந்துதான் ஆக வேண்டும் என திமுக MP ஆ.ராசா தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் நீலகிரியில் போட்டியிட்ட ஆ.ராசா வெற்றி பெற்றார். இதையடுத்து அந்த தொகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று மக்களுக்கு நன்றி கூறினார். அப்போது பேசிய ஆ.ராசா, சீனா, அமெரிக்காவைப் பார்த்து பிரதமர் மோடி பயப்படுகிறாரோ இல்லையோ? முதல்வர் ஸ்டாலினை பார்த்து பயந்து தான் ஆக வேண்டும் என்றார்.

News June 16, 2024

இரவில் நிம்மதியான உறக்கத்திற்கு..

image

இரவில் நிம்மதியாக தூங்குவதற்கு இந்த வழிமுறைகளை கடைபிடிக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
*பசும் பாலை இதமாக சுட வைத்து சிறிது மஞ்சள் தூள் சேர்த்து பருகலாம்.
*இரவில் அதிகம் தண்ணீர் குடிப்பதை தவிர்க்கவும்
*தூங்கும் அறை கும்மிருட்டாக இல்லாமல், மிதமான வெளிச்சத்தில் இருப்பது நல்லது.
*மாமிசம் சாப்பிட்டால் பல் துலக்குவது நலம்.
*தூங்கச் செல்வதற்கு 30நிமிடங்களுக்கு முன்னர் புகைப்பிடிப்பதை தவிர்க்கவும்.

News June 16, 2024

பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்தது

image

தமிழகத்தில் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் உள்ள மலர் சந்தையில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக, மல்லிகைப் பூ கிலோ ₹1700, கனகாம்பரம் ₹900, சம்பங்கி ₹600, முல்லைப் பூ ₹500க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையேற்றம் காரணமாக பல்வேறு வகையான பூக்களை பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News June 16, 2024

விரைவில் மாநாடு குறித்த அறிவிப்பு

image

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். மாநாட்டுக்கான இடத்தேர்வு நடைபெற்று வருவதாகக் கூறிய அவர், அதற்காக 36 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், விரைவில் பொறுப்பாளர்கள் நியமனம் நடைபெறும் என்றார். மதுரை அல்லது சேலத்தில் முதல் மாநாடு நடைபெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

News June 16, 2024

அழைப்பது யார்? தொடங்கியது சோதனை முயற்சி

image

தெரியாத எண்களில் இருந்து அழைப்பவர்கள் பெயர் விவரங்களை, அறிவதற்கான சோதனை முயற்சியை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தொடங்கியுள்ளன. மோசடி மற்றும் போலியான அழைப்புகளை வாடிக்கையாளர்கள் தவிர்க்க இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மும்பை, ஹரியானாவில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில் பிற முக்கிய நகரங்களிலும் அமல்படுத்தப்பட உள்ளதாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கூறியுள்ளன.

error: Content is protected !!