India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2009ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற PAK அணி, டி20 உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக லீக் சுற்றுடன் வெளியேறி இருக்கிறது. இதன் காரணமாக பாபர் அசாம், ரிஸ்வான் உள்ளிட்ட வீரர்களின் ஊதியத்தை குறைக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியத் தலைவர் மோசின் நாக்வி முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், சில வீரர்களை ஊதிய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கவும் முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றி, கல்லீரலை தூய்மைப்படுத்த மாதுளை மல்லி ஜூஸை பருகலாம் என்று சித்த மருத்துவர் சிவராமன் பரிந்துரைக்கிறார். கைப்பிடி அளவு கொத்தமல்லியுடன் ஒரு மாதுளம் பழம், நெல்லிக்காய், எலுமிச்சைச் சாறு சேர்த்து அரைத்தால் ஜூஸ் ரெடி. இந்த ஜூஸை காலை வெறும் வயிற்றில் 45 நாள்கள் குடித்தால் போதும், ரத்தம் சுத்தமாவதுடன் கல்லீரலில் உள்ள கொழுப்பு & நச்சு உள்ளிட்ட அனைத்தும் வெளியேறிவிடுமாம்.
அரசு வேலைவாய்ப்பில் திருநங்கையருக்கு 1% இட ஒதுக்கீட்டை மேற்கு வங்க அரசு வழங்க வேண்டுமென கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெற்ற திருநங்கை இட ஒதுக்கீட்டை உறுதிசெய்யக் கோரி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. வாதங்களைக் கேட்ட நீதிமன்றம், திருநங்கையரை வேலைவாய்ப்பில் சமமாக நடத்தும் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என மேற்கு வங்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்த ‘கருடன்’ திரைப்படம் ₹50 கோடி வசூலை பதிவு செய்யவுள்ளது. கடந்த மே 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் வணிக வெற்றியைப் பெற்றதுடன் விமர்சகர்களிடமும் பாராட்டுகளைப் பெற்றுவருகிறது. தொடர்ந்து 3ஆவது வாரமாக திரையரங்குகளில் ஓடிவரும் இந்தப் படம், இதுவரை உலகளவில் ₹42 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
*1244 – பாரிஸில் 12,000 யூத சமய
கையெழுத்துப்படிகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. *1631 – மும்தாஜ் மகால் பிரசவத்தின்போது இறந்தார். *1794 – கோர்சிக்கன் அரசு அமைக்கப்பட்டது. *1885 – விடுதலை தேவி சிலை நியூயார்க் துறைமுகத்தை வந்தடைந்தது. *1944 – ஐஸ்லாந்து டென்மார்க்கிடம் இருந்து விடுதலைப் பெற்றது. *1950 – சொல்லாய்வறிஞர் அருளியார் பிறந்தநாள். *2021 – சாம்பியா விடுதலைப் போராளி கென்னத் கவுன்டா மறைந்தநாள்.
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஏற்றுமதி சந்தை வாய்ப்பு உள்ளிட்ட ஆலோசனை வழங்க தமிழக அரசின் FaMe TN நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதற்காக மும்பையைச் சேர்ந்த INDIA SME AXIL நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் உள்ள 50 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீட் குளறுபடிகள் குறித்து உச்சநீதிமன்றம் அதிகாரிகளை நியமித்து, விசாரணை நடத்திட வேண்டும் என மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், நீட் விவகாரத்தை பற்றி அனைத்து அரசியல் கட்சிகளும் கேள்வி எழுப்ப வேண்டும் எனக் கூறிய அவர், எதிர்காலத்தில் இத்தேர்வை எப்படி நடத்துவது என்பது குறித்து மாநில அரசுகளுடனும் மத்திய அரசு ஆலோசனை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
செக்குடியரசின் கிராண்ட் பிரிக்ஸ் குத்துச்சண்டை தொடரில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் (26) வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். பிராக் நகரில் நடந்த பெண்களுக்கான 75 கிலோ பிரிவின் இறுதிச்சுற்றில் லவ்லினா, சீனாவின் லி கியானுடன் மோதினார். வெற்றிக்காக போராடிய லவ்லினா, 2-3 என்ற கணக்கில் கியானிடம் தோல்வியடைந்து, 2ஆம் இடத்தைப் பிடித்து, வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.
▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல்
▶அதிகாரம்: பொச்சாவாமை ▶ குறள் எண்: 531
▶குறள்:
இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.
▶பொருள்: மிகுந்த அக மகிழ்ச்சியினால் ஏற்படும் மறதி, அளவு கடந்த அடங்காத பெருஞ் சினத்தினால் ஏற்படும் தீமையைவிட பெருந்தீமையை விளைவிக்கும்.
நடிகர் சல்மான் கானை கொலை செய்ய திட்டம் தீட்டிய லத்தூர்லால் குஜ்ஜார் என்பவரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். சல்மானை, பிஷ்னோய் கும்பல் கொலை செய்ய திட்டம் தீட்டியிருந்தது என யூடியூப் சேனலில் குஜ்ஜார் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், ராஜஸ்தானில் தலைமறைவாக இருந்த குஜ்ஜாரை கைது செய்தனர். ஏப்ரல் 14ஆம் தேதி சல்மான் வீட்டின் முன்பு துப்பாக்கி சூடு நடந்தது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.