News June 17, 2024
சிறு, குறு தொழில்களுக்கு உதவ ‘FaMe TN’ ஒப்பந்தம்

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஏற்றுமதி சந்தை வாய்ப்பு உள்ளிட்ட ஆலோசனை வழங்க தமிழக அரசின் FaMe TN நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதற்காக மும்பையைச் சேர்ந்த INDIA SME AXIL நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் உள்ள 50 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News January 25, 2026
காஞ்சி இளைஞர்களே செம வாய்ப்பு..!

தமிழ்நாட்டை சேர்ந்த 1லட்ச மாணவர்கள் & வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10,+2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <
News January 25, 2026
ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு மட்டும் போதாது: அன்புமணி

மொழிப்போர் தியாகிகள் தினத்தை கடைப்பிடிப்பதன் நோக்கம் ஹிந்தி திணிப்பை எதிர்ப்பது மட்டுமல்ல, தமிழை வளர்ப்பதும் தான் என அன்புமணி கூறியுள்ளார். தனது X-ல், தமிழ் கட்டாயப் பயிற்றுமொழி அரசாணை பிறப்பித்து 26 ஆண்டுகள் ஆகியும், இன்றுவரை நடைமுறைக்கு வரவில்லை என தெரிவித்துள்ளார். SC-ல் நிலுவையில் உள்ள இதுகுறித்த வழக்குகளை விரைவாக விசாரணைக்கு கொண்டுவர திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் சாடியுள்ளார்.
News January 25, 2026
இன்று தேசிய சுற்றுலா தினம்!

ஊர் சுற்றிப் பார்க்க யாருக்கு பிடிக்காது! இந்தியாவின் அழகை உலகிற்கு சொல்லும் விழா என இன்றைய நாளை இன்றை குறிப்பிடலாம். ‘அதிதி தேவோ பவ’ என்ற பண்பாட்டை நினைவூட்டும் விதமாகவும், சுற்றுலாவின் மகத்துவத்தை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஜனவரி 25-ல், ‘தேசிய சுற்றுலா தினம்’ கொண்டாடப்படுகிறது. ‘உள்ளடக்கிய வளர்ச்சிக்கான சுற்றுலா’ என்பதே இந்த ஆண்டின் கருப்பொருள். உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம் எது?


