India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவியை, ஆந்திராவில் தமிழக சிறப்புப்படை போலீஸ் கைது செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு உள்ளிட்ட 22 பேரை போலீஸ் கைது செய்து விசாரித்து வருகிறது. இந்நிலையில் திடீர் திருப்பமாக, சுரேஷின் மனைவி பொற்கொடியை ஆந்திராவில் கைது செய்து, விசாரணைக்காக சென்னைக்கு போலீஸ் அழைத்து வருகிறது.
ரக்ஷா பந்தன் பண்டிகை நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, வங்கிகளுக்கு விடுமுறை என பொதுவாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கேட்டதற்கு, இந்த விடுமுறை தமிழ்நாட்டுக்கு பொருந்தாது என்றும், வட மாநிலங்களான திரிபுரா, குஜராத், ஒடிசா, உத்தரகாண்ட், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், இமாச்சலப்பிரதேச மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றனர்.
ஆளுநர் ரவி இன்று மாலை அவசரமாக டெல்லி புறப்பட்டுச்செல்கிறார். அவரது பதவிக்காலம் ஜூலை 31ல் நிறைவடைந்தது. பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம் என தகவல் வெளியான நிலையில், இதுவரை அறிவிப்பு வரவில்லை. தமிழகத்திற்கு புதிய ஆளுநர் நியமனம் செய்யப்படாததால், அவரே தொடர்ந்து ஆளுநராக இருக்கிறார். இந்நிலையில், பதவி நீட்டிப்பு குறித்து டெல்லியில் மோடி, அமித்ஷாவை ஆளுநர் ரவி சந்தித்துப்பேச இருப்பதாகக் கூறப்படுகிறது.
CSK வீரர் தோனி 2025 IPL தொடரில் Uncapped Playerஆக விளையாடுவார் என தகவல் வெளியானது. இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அந்த அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன், “Uncapped Player விதியை மீண்டும் கொண்டுவர எங்கள் தரப்பில் இருந்து BCCI-யிடம் கோரிக்கை எதுவும் முன்வைக்கப்படவில்லை” என பதிலளித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்று 5 ஆண்டுகள் ஆன வீரரை, Uncapped Player ஆக தக்க வைக்க முடியும்.
ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள “வேட்டையன்” திரைப்படம் அக்.10இல் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான சிறப்பு போஸ்டரில் போலீஸ் கெட்டப்பில் செம மாஸாக ரஜினி இருக்கிறார். மேலும், போஸ்டரில் “WE WANT JUSTICE” என்ற வாசகத்துடன் நீதி கேட்டு வீதியில் இறங்கி மாணவர்கள் போராடும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தை லைகா தயாரிக்கிறது.
கர்நாடக CM சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதித்த ஆளுநரின் முடிவுக்கு எதிராக, அம்மாநில அரசு இன்று ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கிறது. மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் நிலம் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில், சித்தராமையா மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்த, ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கு எதிராக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட உள்ளது.
தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக IAS அதிகாரி முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையைச் சேர்ந்தவரும், பொறியியல் மற்றும் எம்பிஏ பட்டதாரியான முருகானந்தம் 1991ஆம் ஆண்டில் இந்திய குடிமைப் பணித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர். தமிழக அரசின் பல்வேறு பொறுப்புகளில் இருந்த அவர், முதல்வரின் தனிப்பிரிவுச் செயலாளராகவும் இருந்தவர். இந்நிலையில், அவர் தலைமைச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தின் 2ஆம் பாகம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. வசூல் ரீதியில் பிரமாண்ட வெற்றிபெற்ற ‘கைதி’ படம் வெளிவந்தபோதே அதன் 2ஆம் பாகம் உருவாகும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்திருந்தார். ஆனால், அவர் தொடர்ந்து மாஸ்டர், விக்ரம், லியோ, கூலி போன்ற படங்களை இயக்குவதில் பிசியாக இருந்ததால் ‘கைதி-2’ எடுப்பதில் தாமதம் ஏற்பட்டது.
வேலைக்கு ஆட்கள் எடுப்பதில் கூகுள் முன்னுரிமை அளிக்கும் டாப் 10 இந்திய கல்லூரிகளில் 4 தமிழ்நாட்டை சேர்ந்தவை. கூகுள் வேலை முன்னுரிமை பட்டியலில் திருச்சி NIT, அண்ணா பல்கலை, வேலூர் VIT, கோவை PSG கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாட்டு உயர்கல்வியில் முதன்மை மாநிலமாக இருப்பதற்கு இதுவே சிறந்த உதாரணம். இதேபோல், இன்னும் பல கல்லூரிகளை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆண் பாலின இயக்க ஊக்கியான டெஸ்டோஸ்டீரான் உற்பத்தியை அதிகரிக்கும் ஆற்றல் அக்கரகாரத்திற்கு இருப்பதாக சித்த நூல் கூறுகிறது. அஸ்டிரேசியே, பெல்லிடோரின், இனுலின் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்துள்ள அதன் வேரோடு செஞ்சந்தனம், சுக்கு, மிளகு, ஜாதிக்காய், குங்குமப்பூ சேர்த்து செய்யப்படும் மருந்தை உரிய வகையில் உண்டால், நரம்புத் தளர்ச்சி நீங்குவதோடு, விந்தணுக்களின் உயிர்ப்புத் தன்மை அதிகரிக்குமாம்.
Sorry, no posts matched your criteria.