News August 19, 2024

ஆளுநர் ரவி அவசர டெல்லி பயணம்

image

ஆளுநர் ரவி இன்று மாலை அவசரமாக டெல்லி புறப்பட்டுச்செல்கிறார். அவரது பதவிக்காலம் ஜூலை 31ல் நிறைவடைந்தது. பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம் என தகவல் வெளியான நிலையில், இதுவரை அறிவிப்பு வரவில்லை. தமிழகத்திற்கு புதிய ஆளுநர் நியமனம் செய்யப்படாததால், அவரே தொடர்ந்து ஆளுநராக இருக்கிறார். இந்நிலையில், பதவி நீட்டிப்பு குறித்து டெல்லியில் மோடி, அமித்ஷாவை ஆளுநர் ரவி சந்தித்துப்பேச இருப்பதாகக் கூறப்படுகிறது.

Similar News

News January 14, 2026

ராணிப்பேட்டையில் கொடூர வன்முறை!

image

கலவையைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர், நேற்று(ஜன.13) இரவு மது போதையில் கத்தியால் மனைவியின் கையை வெட்டி துண்டாக்கினார். மேலும் பல இடங்களில் கத்தியால் வெட்டியுள்ளார் . இதனால், படுகாயமடைந்த லட்சுமி, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News January 14, 2026

இனி வேலைக்கு ஆட்கள் எடுப்பது ஈஸி

image

சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! WAY2NEWS செயலியில் இப்போது ‘உள்ளூர் வேலைவாய்ப்புகள்’ அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் நிறுவனத்திற்குத் தேவையான ஆட்களை நேரடியாகத் தேர்வு செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பு. உங்கள் உள்ளூர் வேலை விளம்பரங்களைப் பதிவிட இப்போதே கீழே உள்ள <>படிவத்தைக் கிளிக்<<>> செய்யுங்கள். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News January 14, 2026

டீச்சர்களின் போராட்டத்திற்கு இன்று தீர்வா?

image

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 19 நாள்களாக இடைநிலை ஆசிரியர்கள் தீவிரமாக <<18797386>>போராடி<<>> வருகின்றனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். காலை 11 மணியளவில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், இந்த போராட்டத்திற்கு தீர்வு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!