News August 19, 2024
வங்கிகளுக்கு இன்று “லீவ்”? அதிகாரிகள் விளக்கம்

ரக்ஷா பந்தன் பண்டிகை நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, வங்கிகளுக்கு விடுமுறை என பொதுவாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கேட்டதற்கு, இந்த விடுமுறை தமிழ்நாட்டுக்கு பொருந்தாது என்றும், வட மாநிலங்களான திரிபுரா, குஜராத், ஒடிசா, உத்தரகாண்ட், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், இமாச்சலப்பிரதேச மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றனர்.
Similar News
News January 14, 2026
சிப்ஸ் பாக்கெட் பொம்மை வெடித்து பார்வை இழப்பு!

சிப்ஸ் பாக்கெட்டில் வரும் பொம்மை வெடித்து குழந்தையின் கண்பார்வை பறிபோன துயர சம்பவம் ஒடிசாவில் நிகழ்ந்துள்ளது. 8 வயதான அன்கேஷ், சிப்ஸ் பாக்கெட்டில் வந்த பொம்மையை வைத்து சமையல் அறையில் விளையாடியுள்ளான். அப்போது, அந்த பொம்மை ஸ்டவ்வில் விழுந்து வெடித்ததால் கண்பார்வை பறிபோயுள்ளது. கடந்த மாதம் இதே மாநிலத்தில் சிப்ஸ் பாக்கெட் பொம்மையை விழுங்கி 4 வயது குழந்தை பலியானது. பெற்றோர்களே கவனம்.
News January 14, 2026
WPL வரலாற்றில் முதல் சம்பவம்!

மகளிர் பிரீமியர் லீக்கில் ரிட்டயர்டு அவுட் ஆன முதல் வீராங்கனையாக GG வீராங்கனை ஆயுஷ் சோனி உருவெடுத்துள்ளார். நேற்றைய MI-க்கு எதிரான போட்டியில் 6-வதாக களமிறங்கிய அவர், 14 பந்துகளில் 11 ரன்களை மட்டுமே அடித்தார். பெரிய ஷாட்களை அடிக்க முடியாததால் ரிட்டயர்டு அவுட் முறையில் வெளியேற்றப்பட்டு பார்தி ஃபுல்மாலி களமிறக்கப்பட்டார். ஃபுல்மாலி 15 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்களை விளாசி 36 ரன்களை எடுத்தார்.
News January 14, 2026
RCB வீரரின் அணியில் கோலிக்கு இடமில்லை!

RCB விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா, தனது ஃபேவரைட் ஐபிஎல் அணியை தேர்வு செய்துள்ளார். ஆனால், அதில் கோலி இடம்பெறாதது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. ஜிதேஷ் சர்மாவின் அணியின் தோனி கேப்டனாக உள்ளார். அதேபோல் ரோஹித், கில்கிறிஸ்ட், சூர்யகுமார் யாதவ், ஜேக்ஸ் காலிஸ், டிவில்லியர்ஸ், பும்ரா, ஹேசல்வுட், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


