India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஷ்மீர் சட்டமன்றத்தேர்தல் செப்.18 தொடங்கி 3 கட்டங்களாக நடக்கிறது. இந்நிலையில், தேசிய மாநாட்டுக் கட்சித்தலைவர் ஒமர் அப்துல்லா தேர்தல் வாக்குறுதிகளை அள்ளித்தெளித்துள்ளார். அவற்றில் முக்கியமானவற்றை பார்ப்போம். 1. காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட பண்டிட்டுகளை மீண்டும் கொண்டு வருவோம். 2. மின்சாரம் 200 யூனிட் இலவசம். 3. ஒருவருக்கு மாதம் 10 கிலோ இலவச அரசி. ஏழைகளுக்கு ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்.
மலேரியா கொசு மூலம் பரவுவதை கண்டுபிடித்த ரொனால்டு ரோஸின் நினைவாக, ஆக.20 சர்வதேச கொசு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. டைனோசர் காலத்திலிருந்து வாழும் கொசுக்களை பற்றிய சில தகவல்கள். 1. கொசுக்கள் தனது உடலை விட 3 மடங்கு அதிகமான ரத்தம் குடிக்கும். 2. உலகிலேயே ஆபத்தான உயிரினமாக கொசு உள்ளது. 3. 75 அடிக்கு அப்பால் உள்ள வாசனையையும் கொசு நுகரும். 4. 3,500 வகையான கொசுக்கள் உள்ளன.
துக்ளக் சோவின் மனைவி செளந்தரா ராமசாமி (84) காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று அவரது உயிர் பிரிந்ததாகவும், உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சோ மறைவிற்கு பிறகு, துக்ளக் இதழ் போன்றவற்றை கவனித்து வந்தார்.
இந்தியா-போலந்து இடையே 70 ஆண்டு கால தூதரக உறவு நீடிக்கிறது. மத்திய ஐரோப்பிய பிராந்தியத்தில் போலந்து, இந்தியாவின் முக்கிய பொருளாதார கூட்டாளியாகும். 2ஆம் உலகப்போரின்போது (WWII) போலந்தை சேர்ந்த சுமார் 6,000 பெண்கள், குழந்தைகளுக்கு இந்தியாவின் ஜாம்நகர், கொல்காபூரில் அடைக்கலம் கொடுக்கப்பட்டது.
1979-இல், அப்போதைய பிரதமர் மெராஜி தேசாய், போலந்து சென்றார். 45 ஆண்டுகளுக்குப்பின் தற்போது மோடி சென்றுள்ளார்.
FB, எக்ஸ், இன்ஸ்டா உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களிலும், முன்பின் தெரியாதவர்கள் அனுப்பும் தனித்தகவல் & அழைப்புகளை Block செய்ய முடியும். இந்நிலையில், இந்த வசதியை Whatsapp பயனர்களுக்கும் மெட்டா நிறுவனம் விரைவில் (ஆண்ட்ராய்டு அப்டேட் 2.24.17.24) அளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது சோதனையில் உள்ள இந்த அப்டேட் விரைவில் நடைமுறைக்கு வரலாம். இந்த வாட்ஸ்அப் அப்டேட்டை நீங்கள் பயன்படுத்துவீர்களா?
அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கின் விசாரணையை, குற்றச்சாட்டு பதிவுக்காக ஆக.27க்கு சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. வீட்டு வசதி வாரிய மனைகளை முறைகேடாக ஒதுக்கியதாக ஐ.பெரியசாமி உள்பட 7 பேர் மீது 2013ல் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இதில், ஐ.பெரியசாமி தவிர்த்து, மற்ற அனைவரின் வழக்குகளையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. தொடர்ந்து, இந்த வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக இயக்குநர் நெல்சன் மனைவியிடம் விசாரணை நடைபெறுவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. பிரபல ரவுடி சம்போ செந்தில் கூட்டாளியான மொட்டை கிருஷ்ணனுடன் மோனிஷா பேசியதற்காக ஆதாரம் கிடைத்துள்ளதாக தெரிகிறது. இதனால், அவருக்கு மோனிஷா அடைக்கலம் கொடுத்தாரா? என்ற சந்தேகத்தின்பேரில், விசாரணை நடக்கிறது. நெல்சனிடமும் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில், விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் வியாழக்கிழமைக்குள் அறிக்கையை சமர்பிக்க CBIக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இது கொல்கத்தா மருத்துவமனை பிரச்னை மட்டுமல்ல, ஒட்டுமொத்த மருத்துவர்களின் பிரச்னை என்று கூறியுள்ளனர். மேலும், பயிற்சி மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேசிய அளவில் குழு அமைக்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை சம்பவத்தின் அதிர்வலைகள் இன்னும் ஓயவில்லை. அவரது மரணத்தில் பல மர்மங்கள் இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து, இவ்வழக்கை சிபிஐ கையில் எடுத்துள்ளது. இந்நிலையில், இறப்பதற்கு முன்பு அவரது மனநிலை எப்படி இருந்தது என்பதை அறியும் சோதனையை நடத்த, சிபிஐ முடிவு செய்துள்ளது. மேலும், குற்றவாளியிடம் உண்மைக் கண்டறியும் சோதனையை நடத்தவும் சிபிஐ அனுமதி கோரியுள்ளது.
2007 T20WC & 2011 உலகக் கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் யுவராஜ் சிங். அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகவுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டி-சீரிஸ் ஸ்டுடியோ நிறுவனத்தின் தலைவர் பூஷன் குமார் வெளியிட்டுள்ளார். தனித்துவமான விளையாட்டுப் பயணத்தை கதைக்களமாகக் கொண்ட இப்படம் ‘The Test of My Life’ என்ற அவரது சுயசரிதையை தழுவி உருவாக்கப்பட உள்ளது.
Sorry, no posts matched your criteria.