News August 20, 2024
வெள்ளித்திரைக்கு வரும் யுவராஜ் சிங் பயோ -பிக்

2007 T20WC & 2011 உலகக் கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் யுவராஜ் சிங். அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகவுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டி-சீரிஸ் ஸ்டுடியோ நிறுவனத்தின் தலைவர் பூஷன் குமார் வெளியிட்டுள்ளார். தனித்துவமான விளையாட்டுப் பயணத்தை கதைக்களமாகக் கொண்ட இப்படம் ‘The Test of My Life’ என்ற அவரது சுயசரிதையை தழுவி உருவாக்கப்பட உள்ளது.
Similar News
News January 22, 2026
காங்.,க்கு ஒரு கவுன்சிலர் பதவி கூட கிடைக்காது

NDA கூட்டணி இயற்கைக்கு முரணான கூட்டணி என்று விமர்சித்த செல்வப்பெருந்தகைக்கு அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளார் பாப்புலர் முத்தையா பதிலடி கொடுத்துள்ளார். காங்., கட்சி தமிழகத்தில் கிடையாது; தனித்து நின்றால் ஒரு கவுன்சிலர் பதவி கூட வாங்க முடியாது என்று விமர்சித்தார். 2001-ல் பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தபோது இனித்தது; தற்போது மட்டும் கசக்கிறதா என்றும் கேள்வி எழுப்பினார்.
News January 22, 2026
BREAKING: பணம் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்

டிட்வா புயல், பருவமழையால் சேதமான சாலைகளை ₹1,503.78 கோடி செலவில் சீரமைக்கும் பணிகளுக்கு அனுமதி வழங்கி CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சேதமான சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நகர்ப்புற சாலை மேம்பாட்டிற்காக 2025 – 26-ம் ஆண்டில் இதுவரை ₹5,257.78 கோடியை அரசு வழங்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
News January 22, 2026
உடலில் இந்த 5 அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள்!

கல்லீரலை சுற்றி அதிகளவு கொழுப்பு சேர்வது கொழுப்பு கல்லீரல் (Fatty Liver) நோயாகும். இதன் காரணமாக கல்லீரல் செயலிழப்பு, கேன்சர் பாதிப்புக்கு வாய்ப்புள்ளதால் இதை எளிதில் எடுத்துக்கொள்ள முடியாது. கொழுப்பு கல்லீரல் நோயை கண்டறிய அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்யப்படுகிறது. எனினும், இதை அறிகுறிகளை வைத்தும் கண்டறியலாம். அவற்றை போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம் Swipe செய்து பார்க்கவும்.


