News August 20, 2024
இந்தியா-போலந்து உறவு பற்றி தெரியுமா?

இந்தியா-போலந்து இடையே 70 ஆண்டு கால தூதரக உறவு நீடிக்கிறது. மத்திய ஐரோப்பிய பிராந்தியத்தில் போலந்து, இந்தியாவின் முக்கிய பொருளாதார கூட்டாளியாகும். 2ஆம் உலகப்போரின்போது (WWII) போலந்தை சேர்ந்த சுமார் 6,000 பெண்கள், குழந்தைகளுக்கு இந்தியாவின் ஜாம்நகர், கொல்காபூரில் அடைக்கலம் கொடுக்கப்பட்டது.
1979-இல், அப்போதைய பிரதமர் மெராஜி தேசாய், போலந்து சென்றார். 45 ஆண்டுகளுக்குப்பின் தற்போது மோடி சென்றுள்ளார்.
Similar News
News January 19, 2026
ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தது பாஜக: தமிழிசை

ஜல்லிக்கட்டை ‘காட்டுமிராண்டி விளையாட்டு’ என்ற காங்கிரஸுடன் திமுக கூட்டணி வைத்துள்ளது என தமிழிசை விமர்சித்துள்ளார். பாஜக அரசுதான் தடையை நீக்கி ஜல்லிக்கட்டை மீட்டெடுத்ததாக கூறிய அவர், ஆனால் அதை தற்போது திமுகவின் விழாவாக மாற்றிவிட்டனர் எனவும் கூறியுள்ளார். மேலும்,
ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்குவது வரவேற்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.
News January 19, 2026
விஜய்யிடம் CBI அடுக்கிய கேள்விகள்.. கசிந்தது தகவல்!

கரூர் வழக்கில் விஜய்யை விசாரிக்கும் CBI, அவரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. இவ்விவகாரத்தில் அரசு முறையான நடைமுறையை பின்பற்றாததே காரணம் என தவெக தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது. இதன்பிறகு விஜய்யிடம் கேள்விகளை அடுக்கிய CBI, கூட்டத்தில் இருந்து தண்ணீர் பாட்டிலை வீசியபோது நெரிசலை பார்க்கவில்லையா? தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தது ஏன்? கீழே நிலைமை மோசமானது தெரியவில்லையா என கேட்டுள்ளதாக கூறப்படுகிறது
News January 19, 2026
சிறுவன் கைகளில் மும்பை மேயர் பதவி!

தேர்தல் முடிந்தாலும், மும்பை மேயர் யார் என்பது சஸ்பென்ஸாக இருக்க காரணம் அங்குள்ள குலுக்கல் முறை! மும்பை மேயர் பதவி 2.5 ஆண்டுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் இடஒதுக்கீடு (பெண்/SC/ST/OBC/பொது) செய்யப்படும். சீட்டு எழுதி குலுக்கி போட்டு, மாநகராட்சி பள்ளி சிறுவன் ஒருவன் எடுப்பான். அதில் வரும் பிரிவை சேர்ந்த வேட்பாளர்களில் இருந்து மேயர் தேர்வு செய்யப்படுவார். அடுத்தவாரம் இந்த தேர்வு நடைபெறவுள்ளது.


