India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
SC, ST இடஒதுக்கீட்டில், கிரீமிலேயர் முறை அவசியம், உள்ஒதுக்கீடு வழங்க மாநிலங்களுக்கு அதிகாரம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக நாளை நாடு தழுவிய பந்த் நடைபெற உள்ளது. இந்த தீர்ப்பு, SC, ST இடஒதுக்கீட்டு உரிமையை நசுக்கும் செயல் என விசிக, வடமாநில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், முழு பந்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. தமிழகத்தில் சில அமைப்புகள் இந்த பந்தில் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது.
பாஜகவுடன் திமுகவுக்கு ரகசிய உறவு என இபிஎஸ் திட்டமிட்டு அவதூறு பரப்புவதாக சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழகத்தை தொடர்ந்து புறக்கணிக்கும் பாஜக அரசுடன், திமுக இணைந்து செல்ல வாய்ப்பில்லை என்று கூறிய அவர், ‘கலைஞர் 100’ நாணய விழாவை காரணம் காட்டி திமுக-பாஜக ரகசிய உடன்பாடு என கூறுவது சரியான அரசியல் நடைமுறை அல்ல என்று விமர்சித்துள்ளார்.
நடிகை சமந்தாவுடனான விவாகரத்துக்குப் பின் நடிகர் நாக சைதன்யாவுக்கும், நடிகை ஷோபிதாவுக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தற்போது இவர்களது திருமணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அவர்களது நெருங்கிய நண்பர்களின் கூற்றுப்படி, இந்த ஆண்டு இறுதி அல்லது 2025 பிப்ரவரியில், ராஜஸ்தான் (அ) ம.பி.,யில் திருமணம் நடைபெறும் என கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் இறுதி போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத் ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அவரை களமிறக்க சில அரசியல் கட்சிகள் அவரிடம் பேசி வருவதாக தெரிவித்துள்ளனர். பஜ்ரங் புனியாவும் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும், இவர்கள் இருவரும் பாஜக வேட்பாளரை எதிர்த்து காங்., சார்பில் போட்டியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
முதல்வர் ஸ்டாலின் பாஜக பக்கம் ஒருபோதும் போகமாட்டார் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். மதவாதத்தை எதிர்ப்பதில் காங்கிரஸ் எந்த அளவு தீவிரமாக உள்ளதோ அதே அளவுக்கு, ஸ்டாலினும் தீவிரமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கலைஞரை இன்றைக்கு புகழும் பாஜக தலைவர்கள், தேர்தலுக்கு முன்பு அவரை வசை பாடியதை திருப்ப பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தை, லைகா நிறுவனம் தயாரிக்கும் நிலையில், அனிருத் இசையமைத்துள்ளார். இதில், அர்ஜுன், திரிஷா, சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஹைதராபாத்தில் நடந்த இறுதிகட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், படக்குழு புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
உலகின் முதிய பெண்மணி எனக் கருதப்பட்ட மரியா பிரான்யாஸ் மோரேரோ, தனது 117ஆவது வயதில் காலமானார். அமெரிக்காவில் பிறந்த அவர், கடந்த 20 ஆண்டுகளாக ஸ்பெயினில் உள்ள முதியோர் இல்லத்தில் வாழ்ந்து வந்தார். 2 உலகப் போர், கோவிட்-19 பெருந்தொற்று என பலவற்றை சந்தித்த அவருக்கு, கடந்த 2023இல் உலகின் முதிய பெண்மணி என்ற கின்னஸ் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியா கூட்டணியின் கடும் எதிர்ப்புக்கு பின், நேரடி நியமனமுறை ரத்து செய்யப்பட்டது சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசு பல்வேறு வடிவங்களில் இடஒதுக்கீட்டை பலவீனப்படுத்த முயற்சிப்பதால், அனைவரும் விழிப்புடன் இருக்கும்படி அறிவுறுத்திய அவர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை காக்க நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.
கிருஷ்ணகிரியில் ஆட்டை நடுரோட்டில் வெட்டிய சம்பவத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுக்கு பிறகு, திமுகவை சேர்ந்த சிலர் ஆட்டுக்கு அண்ணாமலை படத்தை அணிவித்து நடுரோட்டில் வெட்டினர். இந்த விவகாரம் தேசிய அளவில் சர்ச்சையான நிலையில், இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
தமிழ் சினிமா துறையிலும் பாலியல் தொல்லை தரப்படுவதாக, நடிகை ஷனம் ஷெட்டி குற்றஞ்சாட்டியுள்ளார். மலையாள சினிமாவில் நடக்கும் அவலங்கள் குறித்து, நீதிபதி ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கைக்கு நன்றி கூறிய அவர், பட வாய்ப்புகளுக்காக அட்ஜஸ்ட்மென்ட் என்ற நிலை தமிழ் சினிமாவிலும் உள்ளதாகச் சாடினார். பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியால் ஃபேமஷான ஷனமின் இந்த கருத்து, தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.