news

News October 20, 2024

Ranji Trophy: வலுவான நிலையில் தமிழ்நாடு

image

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணிக்கெதிரான ஆட்டத்தில் 3ஆம் நாள் முடிவில் தமிழ்நாடு அணி 410 ரன்கள் முன்னிலையில் உள்ளது. முதல் இன்னிங்சில் தமிழ்நாடு அணி 674/6 ரன்கள் எடுத்த நிலையில், டெல்லி அணி தற்போது 264/8 ரன்கள் எடுத்துள்ளது. யஷ் துல் 103* ரன்களுடன் களத்தில் உள்ளார். தமிழ்நாடு அணியில் சாய் சுதர்சன் 213, வாஷிங்டன் சுந்தர் 152, பிரதோஷ் பால் 117 ரன்கள் எடுத்திருந்தனர்.

News October 20, 2024

நடிகை சாக்ஷி பெயரில் பண மோசடி

image

தனது பெயரை பயன்படுத்தி சிலர் பண மோசடியில் ஈடுபடுவதாக நடிகை சாக்ஷி அகர்வால் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டா பதிவில், 98846 28420 என்ற எண்ணில் இருந்து தொடர்பு கொண்டு தனது பெயரைக் கூறி பணம் கேட்பதாகவும், அது போன்ற அழைப்புகளை நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். சினிமா தொடர்பாக தன்னுடன் பேச மின்னஞ்சல் மூலமாக தொடர்புகொள்ளவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

News October 20, 2024

தீபாவளிக்கு முதல் நாளும் விடுமுறை விடுங்க: கோரிக்கை

image

தீபாவளிக்கு முந்தைய நாள் (அக்.30) விடுமுறை அளிக்க அரசுக்கு பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தினர், பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வெளியூரில் இருந்து சொந்த ஊர் செல்ல ஏதுவாகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும் அக்.30ம் தேதி விடுமுறை அளிக்க கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து அரசு பரிசீலனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை விடுமுறை அளித்தால், அக்.30 – நவ.3 வரை 5 நாள் விடுமுறையாகும்.

News October 20, 2024

ஆகாயத்தில் மிதந்தேன்.. சர்பராஸ் HAPPY

image

பெங்களூரு டெஸ்டில் சதமடித்தபோது ஆதாயத்தில் மிதப்பது போல உணர்ந்ததாக இந்திய அணி வீரர் சர்பராஸ் கான் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சதமடித்து விட்டு ஓடி வந்தபோது புல் தரை பச்சை நிறமாக தெரியவில்லை, ஆகாயத்தில் உள்ள ஊதா நிறமாக காட்சியளித்தது என்றும் அவர் கூறியுள்ளார். இந்திய அணிக்காக சதமடிக்க வேண்டும் என்பது தனது கனவு என்றும், அது நிஜமாகி விட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

News October 20, 2024

அது ஒருபோதும் நடக்காது… திமுகவுக்கு எல். முருகன் சவால்

image

மழை பிரச்னையில் இருந்து மக்கள் கவனத்தை திசை திருப்பும் முயற்சியாக திராவிட சொல் விவகாரத்தை திமுக எழுப்புவதாக எல்.முருகன் சாடியுள்ளார். தமிழர்களுக்கு எதிரான கட்சியாக பாஜகவை காட்ட திமுக முயற்சிக்கிறது. ஆனால் அது ஒருபோதும் நடக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஹிந்தியை யாரும் திணிக்கவில்லை. மக்கள் வேறு மொழியை கற்க விரும்பினால் கற்கலாம் எனவும் எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார்.

News October 20, 2024

Health Tips: குடல் நலமே மூளை நலமாகும்!

image

குடலுக்கும் மூளைக்கும் நிறைய தொடர்பு உண்டு என்பது தெரியுமா? இந்தத் தொடர்பை Gut-Brain Axis என்கிறார்கள். குடலுக்கு ‘2ஆம் மூளை’ என்றும் ஒரு பெயருண்டு. காரணம், மூளையின் செயல்பாட்டுக்கு ‘செரட்டோனின்’ எனும் நரம்புக் கடத்தி ரசாயனம் தேவை. உடலுக்கு தேவையான 95% செரட்டோனின் குடலில்தான் சுரக்கிறது. உடல் & மனநிலையை ஒழுங்குபடுத்துவதிலும், நோய் எதிர்ப்பு ஆற்றலை தக்க வைப்பதிலும் குடலுக்கு முக்கிய பங்குள்ளது.

News October 20, 2024

2 மணி நேரத்திற்கு மிக கனமழை

image

தமிழ்நாட்டில் 29 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, தி.மலை, வேலூர், சேலம், நாமக்கல், திருச்சி, நாகை, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

News October 20, 2024

46 ரன்களில் ஆல் அவுட்டை எதிர்பார்க்கவில்லை: ரோஹித்

image

நியூசி.க்கு எதிராக 46 ரன்களில் ஆல் அவுட் ஆவோம் என்று எதிர்பார்க்கவில்லை என ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார். 2ஆவது இன்னிங்சில் சிறப்பாக பேட் செய்தது மகிழ்ச்சியை தந்தாலும், அது வெற்றியை தராமல் போனது வருத்தமாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். நியூசி அணி நன்றாகப் பந்து வீசினர், அதற்கு இந்திய அணி பதிலளிக்கத் தவறிவிட்டது என்றார். பண்ட், சர்பராஸ் கானின் ஆட்டம் அபாரமானது எனவும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

News October 20, 2024

அனைத்து மொழிகளுக்கும் போதிய நிதி தருக: முத்தரசன்

image

இந்தி மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளுக்கு மட்டும் கூடுதல் நிதி ஒதுக்கியதாக மத்திய அமைச்சர் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளுக்கும் சம வாய்ப்பு தர வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், தமிழ், மலையாளம், கன்னடம் உள்பட அனைத்து மொழிகளுக்கும் போதிய நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

News October 20, 2024

CAKE உண்டால் மரபணுக்களில் மாற்றம் நிகழும்?

image

ரசாயனங்கள் அடங்கிய கேக்குகளை அடிக்கடி சாப்பிட்டால், புற்றுநோய்க்கு அது வழி வகுக்கும் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. Allura Red, Ponceau 4R, Carmoisine போன்ற செயற்கை வண்ண ரசாயனங்கள் ‘புற்றுநோய் ஊக்கிகள்’ என அறியப்பட்டவை. அவை சேர்க்கப்பட்ட கேக்கை சாப்பிடுபவர்களின் மரபணுக்களில் மாற்றம் நிகழ்கிறது என்றும் புற்றுநோயைத் தடுக்கும் மரபணுக்கள் சிதைக்கின்றன எனவும் சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

error: Content is protected !!