News November 22, 2024

VOTER ID-யில் திருத்தம் செய்ய வேண்டுமா? நாளை முகாம்

image

VOTER ID-யில் முகவரி, புகைப்படம், தொகுதி தகவல்களை எப்படி திருத்துவது என தெரியாமல் சிலர் இருப்பர். அதேபோல், புதிதாக வாக்காளர் அட்டைக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது தெரியாமலும் சிலர் இருப்பர். அவர்களுக்காக கடந்த சனி, ஞாயிறுகளில் EC சிறப்பு முகாம்களை நடத்தியது. இதேபோல், நாளை (நவ.23), நாளை மறுநாளும் (நவ.24) சிறப்பு முகாம்களை அருகிலுள்ள வாக்குச்சாவடிகளில் நடத்தவுள்ளது. இந்தத் தகவல்களை பகிருங்க.

Similar News

News November 11, 2025

வாசிங்டன் சுந்தர் மீது கண் வைத்த CSK.. கறார் காட்டும் GT

image

அஸ்வினின் ஓய்வு மற்றும் சஞ்சு சாம்சனுக்காக ஜடேஜாவை விட்டுக் கொடுப்பதற்கு மத்தியில், ஸ்பின்னர் + ஃபினிஷர் இல்லாமல் <<18231489>>CSK<<>> திண்டாடி வருகிறது. அந்த வகையில், GT-ன் இளம் ஆல்ரவுண்டரான வாசிங்டன் சுந்தர் மீது CSK கண் வைத்துள்ளது. இது தொடர்பாக, GT-யுடன் பேச்சுவார்த்தை நடந்த, அந்த அணி நிர்வாகம் கறாராக மறுத்துவிட்டதாம். தற்போதைய நிலையில், ஆப்கனின் நூர் அகமது மட்டுமே CSK-ல் உள்ள முன்னணி ஸ்பின்னர்.

News November 11, 2025

₹7,000 கோடி to ₹5,000 கோடி.. இழப்பை குறைக்கும் VI

image

வோடஃபோன் ஐடியா நிறுவனம், 2-வது காலாண்டின் ஒருங்கிணைந்த நிகர இழப்பை ₹5,524 கோடியாக குறைத்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ₹7,176 கோடியாக இருந்தது. அதேபோல், வருவாய் ₹11,194 கோடி (முன்பு ₹10,932 கோடி), ஒரு கஸ்டமரிடம் ஈட்டும் சராசரி வருவாய் ₹188-ஆக (முன்பு ₹166) உயர்ந்துள்ளது. முன்னதாக, வருவாய் இழப்பை சமாளிக்க முடியாமல், இந்நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறுவதாக வதந்தி பரவியது.

News November 11, 2025

டெல்லி குண்டு வெடிப்பு: கார் ஓனர் அடையாளம் தெரிந்தது

image

<<18252501>>டெல்லி குண்டு வெடிப்பில்<<>> ஈடுபடுத்தப்பட்ட கார் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. HR26 CE 7674 என்ற பதிவெண் கொண்ட அந்த காரானாது, ஹரியானாவின் குருகிராமைச் சேர்ந்த முகமது சல்மான் என்பவருக்கு சொந்தமானது. அவரை கைது செய்து போலீசார் விசாரித்த போது, ஜம்மு & காஷ்மீரின் புல்வாமா பகுதியைச் சேர்ந்த தாரிக் என்பவருக்கு காரை விற்றுவிட்டதாக தெரிவித்ததுள்ளார். அடுத்தக்கட்ட விசாரணையை போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர்.

error: Content is protected !!