News November 22, 2024
AUS மண்ணில் பண்ட் செய்த தரமான சம்பவம்

147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், AUS மண்ணில் அதிக ரன்கள் அடித்த வெளிநாட்டு விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார். இன்றைய முதல் நாள் ஆட்டத்தில், 37 ரன்களை பண்ட் அடித்தார். இதோடு சேர்த்து, ஆஸி., மண்ணில் அவர் மொத்தம் 661 ரன்களை எடுத்துள்ளார். முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 150 ரன்கள் எடுத்த நிலையில், AUS அணி 67 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்துள்ளது.
Similar News
News November 14, 2025
200 இடங்களில் NDA முன்னிலை

மொத்தமுள்ள 243 தொகுதிகளில் NDA கூட்டணி 200 இடங்களில் முன்னிலையில் உள்ளது. MGB கூட்டணி 37 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது. மற்றவை 6 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், ஜன் சுராஜ் கட்சி ஒரு இடத்தில் கூட முன்னிலை பெறவில்லை. BJP – 91, JD(U) – 81, RJD – 26, INC – 4, AIMIM – 5 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
News November 14, 2025
நாளை பள்ளிகள் விடுமுறை.. அறிவித்தார் ஆட்சியர்

புதுச்சேரியில் நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே விடப்பட்ட விடுமுறை ஈடுகட்டும் வகையில் நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறுவதால், நாளை பள்ளிகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளைய விடுமுறை ஈடுசெய்ய ஜன.3-ம் தேதி வேலை நாளாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 14, 2025
Beef வைத்திருந்ததற்காக ஆயுள் தண்டனை!

நாட்டிலேயே முதல் முறையாக, குஜராத்தில், இறைச்சிக்காக மாடுகளை கொன்றதாக 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து குஜராத் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2023-ல் அம்ரேலியில் சட்டவிரோதமாக மாடுகளை கொன்று 40 கிலோ இறைச்சியை வைத்திருந்ததாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். குஜராத் விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், 3 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா 6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


