India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் <<18685118>>’சூர்யா 46′<<>> திரைப்படத்தில், துல்கர் சல்மான் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனெவே சுதா கொங்கராவின் ‘பராசக்தி’ படத்தில் முதலில் சூர்யா மற்றும் துல்கர் சல்மானே சகோதரர்களாக நடிக்கவிருந்தனர். ஆனால், அது நடக்காமல் போன நிலையில், தற்போது இந்த காம்போ இணையவுள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் DRG நடத்திய தேடுதல் வேட்டையில் 12 நக்சல்கள் என்கவுன்டரில் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஏராளமான துப்பாக்கிகள், வெடிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வரும் மார்ச் மாதத்திற்குள் இந்தியாவை நக்சல்கள் இல்லாத நாடாக மாற்றுவோம் என அமித்ஷா கூறியுள்ள நிலையில், தேடுதல் வேட்டை மேலும் தீவிரமடைந்துள்ளது.

சதுரங்க வேட்டை படத்தில் வெறும் ₹150 மதிப்புள்ள வாட்சை, சிங்கப்பூர் வாட்ச் என ஏமாற்றி ₹5,000-க்கு விற்கும் காட்சியை பார்த்தால் இன்றும் சிரிப்பு வரும். அதே போன்று, உயர்ரக வாட்ச் வாங்கி தருவதாக கூறி, 14 பேரிடம் ₹3.46 கோடி மோசடியில் ஒருவர் ஈடுபட்டிருக்கிறார். சிங்கப்பூரில் சோ ஜியான் (33) என்பவர், தனது கோடிக்கணக்கான கிரெடிட் கார்டு கடனை அடைப்பதற்காக இந்த நூதன மோசடியில் இறங்கி வசமாக சிக்கியுள்ளார்.

MH மாநகராட்சி தேர்தல் வரும் 15-ம் தேதி நடக்கவுள்ள நிலையில், 68 இடங்களில் ‘பாஜக கூட்டணி’ போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளது. மும்பை, புனே, ஜல்கான், கல்யாண் உள்ளிட்ட 8 மாநகராட்சிகளில் 68 இடங்களில் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றதை ‘ஆடாமலேயே வெற்றி’ என பாஜகவினர் கொண்டாடுகின்றனர். ஆனால், ED, CBI மூலம் வெற்றியை விலைக்கு வாங்கியது மிகவும் கேவலமானது என உத்தவ் சிவசேனா சாடியுள்ளது.

பொங்கல் பரிசுத்தொகைக்கான எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. பொதுவாக பொங்கல் பரிசு பணம் ரேஷன் கடைகளில் தான் வழங்கப்படும். ஆனால் இம்முறை வங்கி கணக்கில் செலுத்துவது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பணத்தை கொண்டு செல்லும்போது பாதுகாப்பு பிரச்னை ஏற்படாமல் இருக்கவும் இந்நடைமுறையை மேற்கொள்ளலாமா என பரிசீலித்து வருவதாக முக்கிய தகவல் கசிந்துள்ளது.

வீட்டில் உள்ளவர்கள் அவசர தேவைக்கு உங்களுக்கு Call பண்ணும்போது, அதனை எடுக்கமுடியாமல் போனால் ஏதாவது அசம்பாவிதம் நேரலாம். இதனை தவிர்க்க போனில் இந்த Settings-ஐ ON- செய்யுங்க. ➤போனில் உள்ள Dial pad-க்கு சென்று ➤Calling Accounts ➤Call forward Settings-ஐ க்ளிக் பண்ணுங்க ➤நெருங்கிய உறவினரின் போன் நம்பரை உள்ளிடுங்கள். Call-ஐ நீங்கள் எடுக்கவில்லை என்றால், அது அவர்களுக்கு Forward ஆகும். SHARE.

வீரமங்கை வேலுநாச்சியாரின் 296-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. ராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து சேதுபதிக்கு ஒரே மகளாக 1730-ல் பிறந்தார். தனது கணவர் மறைவையடுத்து, ஆங்கிலேயரிடம் இருந்து சிவகங்கையை 1780-ல் மீட்டெடுத்தார். இதனால் இந்தியாவின் முதல் பெண் சுதந்திரப் போராட்ட வீராங்கனை என அழைக்கப்படுகிறார். 2008-ல் மத்திய அரசு நினைவு அஞ்சல் தலை வெளியிட்டு இந்த வீரமங்கையை பெருமைப்படுத்தியது.

திமுகவிடம் 38 சீட்களை கேட்பதோடு 3 அமைச்சர் பதவிகளையும் காங்கிரஸ் டிமாண்ட் செய்வதாக தகவல் கசிந்துள்ளது. இதை கொடுத்தால் மட்டுமே கூட்டணி எனவும், குறைந்தபட்சம் வாய்வார்த்தையாக ஒப்புக்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாம். இதுகுறித்து ஆலோசனை நடத்த மல்லிகார்ஜுன கார்கேவை, ப.சிதம்பரம் கூடிய விரைவில் சந்திக்க உள்ளதாக பேசப்படுவதால் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.

திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்தால் குற்றம் என்ற சட்டம் இந்தோனேசியாவில் அமலுக்கு வந்துள்ளது. 2023-ல் அதிபரால் அங்கீகரிக்கப்பட்ட இந்த மசோதா, தற்போது சட்டமாக்கப்பட்டுள்ளது. இதன்படி, திருமணத்திற்கு முன்பு ஒன்றாக வாழ்ந்தால் 6 மாத சிறைத் தண்டனையும், திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்தால் 1 வருட சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். ஆனால், இது ஒருவரின் தனியுரிமைகளை மீறுவதாக ஐநா கண்டனம் தெரிவித்துள்ளது.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மயிலாடுதுறை மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 2 நாட்டுப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், கைதான மீனவர்கள் காரைநகர் கடற்கரை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நேற்று நெடுந்தீவு அருகே 11 காரைக்கால் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருந்தது. இப்பிரச்னை நீண்ட காலமாக உள்ளதால், நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்துகின்றனர்.
Sorry, no posts matched your criteria.