India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

‘அடியே காந்தா’ என்ற வசனம் தற்போது நகைச்சுவைக்காக பயன்படுத்தப்பட்டாலும், இந்த வசனம் இடம்பெற்ற படம் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் நீங்கவில்லை. M.R.ராதாவின் தனித்துவமான நடிப்பு இன்றும் ரசிக்கப்படுகிறது. திருவாரூர் தங்கராசு எழுத்தில், கிருஷ்ணன் – பஞ்சு இயக்கத்தில் உருவான ‘ரத்தக்கண்ணீர்’, தேசிய திரைப்பட ஆவணக் காப்பகத்தின் கிளாசிக் படங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. படத்தில் பிடித்த சீன் எது?

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்க படைகள் சிறை பிடித்து நாடு கடத்திவிட்டதாக டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க அரசியல் சாசனம் மற்றும் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு, <<18750130>>வெனிசுலா மீது தாக்குதல்<<>> நடத்தப்பட்டதாகவும், சில மணி நேரங்களிலேயே மதுரோ சிறைபிடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், வெனிசுலா தற்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

காய்கறிகள் சாப்பிடுவதால் உங்கள் உயிரே போகலாம் என சொன்னால் நம்பமுடிகிறதா? ஆம், முட்டைகோஸ், கத்திரிக்காய், காலிஃபிளவர், கீரை போன்ற காய்கறிகளில் இருக்கும் நாடபுழுக்கள் தற்போது அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதனை சரியாக கழுவாமல் சாப்பிட்டால், புழுக்கள் ரத்த ஓட்டத்தில் கலந்து, மூளைக்கு சென்றடையும். பிறகு, வலிப்பு, தலைவலியில் தொடங்கி உயிரையே பறிக்கலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். SHARE.

அரசு ஊழியர்களுக்கான உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் (TAPS) குறித்து CM ஸ்டாலின் தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், வாக்களித்த மக்களுக்கு திமுக அரசு உண்மையாக இருக்கும் என மீண்டும் ஒருமுறை செய்து காட்டியுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார். அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரும் புத்தாண்டு, பொங்கல் பரிசாக <<18749969>>TAPS<<>> அறிவிப்பினை வெளியிட்டுள்ளோம் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தேர்தல் அறிக்கைக்கான ‘DMK Manifesto 2026’ செயலியை CM ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த செயலி மூலம், திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். இது, தமிழ், ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளிலும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கை தயாரிக்க அமைக்கப்பட்ட கனிமொழி தலைமையிலான குழு, இந்த செயலியை கண்காணித்து, அறிக்கையை தயார் செய்யும்.

ரஜினியின் 173-வது பட அப்டேட் இன்று வெளியான நிலையில், படத்தின் கதை இதுதான் என நெட்டிசன்கள் கணித்து வருகின்றனர். அதன்படி, ரஜினி ஒரு காலத்தில் நேர்மையான போலீஸாக இருந்தார். பின் தனது பேமிலிக்காக சாதாரண டெய்லராக (போஸ்டரில் உள்ள கத்தரி, நூலை அடிப்படையாக வைத்து) வாழ்க்கையை தொடர்கிறார். எனினும் தன்னை துரத்தும் எதிரிகளிடமிருந்து எப்படி குடும்பத்தை காக்கிறார் என்பதே கதையாக இருக்கும் என கணித்துள்ளனர்.

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேசிய கட்சிகளின் தலைவர்களும் தமிழகத்திற்கு அடுத்தடுத்து வரவுள்ளனர். இந்நிலையில், ஜன., 4-வது வாரத்தில் ராகுல் காந்தி தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 100 நாள் வேலைத்திட்ட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்., நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்பார் என கூறப்படுகிறது. மூத்த நிர்வாகிகள் உடனும் ஆலோசனை நடத்துவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

2026 சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலின் மீண்டும் முதல்வராக அதிக வாய்ப்புள்ளதாக லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களின் IPDS-ன் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. 234 தொகுதிகளில் 81,375 பேரிடம் நடத்தப்பட்ட சர்வேயில் ஸ்டாலின் முதலிடம், விஜய் 2-ம் இடம், EPS 3-ம் இடம் பிடித்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த சர்வேயில் இந்துக்கள்-81.71%, கிறிஸ்துவர்கள்-10.55%, இஸ்லாமியர்கள்-7.75% பேர் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

<<18749969>>TAPS திட்டம்<<>> செயல்படுத்தப்பட்டபின், பென்ஷன் பெறுவதற்கான தகுதி, பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் ஓய்வு பெறும் அனைத்து ஊழியர்களுக்கு குறைந்தபட்ச பென்ஷன் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. மேலும், CPS-ன் கீழ் பணியில் சேர்ந்து இடைப்பட்ட காலங்களில்(23 ஆண்டுகள்) ஓய்வு பெற்றவர்களுக்கும் சிறப்பு கருணை பென்ஷன் வழங்கப்படும் என அரசு கூறியுள்ளது. TAPS திட்டத்தை செயல்படுத்த அரசுக்கு ₹13,000 கோடி செலவாகும்.

சீருடை பணியாளர்களுக்கான பணி நியமன ஆணைகளை CM ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து பேசிய அவர், போலீசாருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மக்களுக்கு பயனளிக்கும் வகையில் முறையாக பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார். போதைப்பொருள் விவகாரத்தில் சமரசமின்றி செயலாற்ற வேண்டும் என கூறிய அவர், குற்றம் செய்பவர்களிடம் இரும்புக்கரத்தையும், புகார் அளிக்க வருபவர்களிடம் அன்புக்கரத்தையும் காட்டுங்கள் என்று அறிவுறுத்தினார்.
Sorry, no posts matched your criteria.