news

News January 3, 2026

தவெக பொங்கல் பரிசில் குக்கர்

image

தவெக சார்பில் குக்கர், கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. சென்னை அம்பத்தூரில் நடந்த நிகழ்ச்சியில் புஸ்ஸி ஆனந்த், 500 பெண்களுக்கு இத்தொகுப்பை வழங்கியுள்ளார். முன்னதாக, கரூர் மக்களுக்கு தீபாவளி பரிசாக செந்தில்பாலாஜி சில்வர் அண்டா கொடுத்திருந்தார். இந்நிலையில், பொங்கல் தொகுப்பில் குக்கரை தவெக இணைத்திருப்பது பேசுபொருளாகியுள்ளது.

News January 3, 2026

FLASH: அரசு ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்!

image

<<18749969>>TAPS பென்ஷன்<<>> திட்டத்திற்கு அரசு ஊழியர்கள் சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன. அத்துடன் ஜாக்டோ-ஜியோ அமைப்பு வரும் 6-ம் தேதி முதல் நடத்த இருந்த காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தையும் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது. மேலும், தங்களது இதர கோரிக்கைகளையும் CM நிறைவேற்றுவார் என நம்பிக்கை இருப்பதாக கூறிய அவர்கள், CM ஸ்டாலினுக்கு இனிப்பு ஊட்டி இந்த அறிவிப்பை கொண்டாடுகின்றனர்.

News January 3, 2026

KKR அணியில் இருந்து வங்கதேச வீரரை நீக்க BCCI ஆணை

image

வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மானை விடுவிக்குமாறு KKR அணிக்கு அறிவுறுத்தி உள்ளதாக பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் இந்து இளைஞர் கொல்லப்பட்டதை அடுத்து, IPL ஏலத்தில் முஸ்தபிசுரை ₹9.20 கோடிக்கு வாங்கியதற்காக அந்த அணியின் உரிமையாளரும், <<18746993>>நடிகருமான ஷாருக் கானுக்கு<<>> நாடு முழுவதும் பாஜக, இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் பிசிசிஐ இன்று உத்தரவிட்டுள்ளது.

News January 3, 2026

TN அரசின் பென்ஷன்(TAPS) திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

image

*மாநில அரசு ஊழியர்கள் பெற்ற கடைசி மாத சம்பளத்தில் 50% பென்ஷன் கிடைக்கும். *பணியாளர்களின் 10% பங்களிப்போடு, ஓய்வூதிய நிதிக்கு தேவையான கூடுதல் நிதியை TN அரசு ஏற்கும். *50% <<18749654>>TAPS பென்ஷன்<<>> பெறுவோருக்கும் அரசு ஊழியர்களை போல் 6 மாதங்களுக்கு ஒருமுறை DA உயர்வு. *பென்ஷன்தாரர் இறந்துவிட்டால் குடும்ப உறுப்பினர்களுக்கு 60% குடும்ப பென்ஷன். *ஊழியர் பணிக்காலத்தில் இறக்க நேரிட்டால் ₹25 லட்சம் மிகாமல் பணிக்கொடை.

News January 3, 2026

இறால் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

image

கடல் உணவுகளில் ஒன்றான இறால் ருசியானது மட்டுமல்ல, ஆரோக்கியமும் நிறைந்தது என டாக்டர்கள் கூறுகின்றனர். *புரதச்சத்து தசைகளை வலுப்படுத்த, கொழுப்பை குறைக்க உதவுகிறது *கால்சியம், மெக்னீசியம் எலும்புகளை வலுவாக்குகின்றன *ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இதயத்திற்கு நல்லது *வைட்டமின் பி12 மனச்சோர்வை குறைக்கிறது *நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது *செலினியம் கேன்சர் செல்களின் வளர்ச்சியை தடுக்க உதவுகிறது.

News January 3, 2026

போதை வளர்க்கும் இடமா ஹாஸ்பிடல்? அன்புமணி

image

சிவகங்கையில் செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் பிரசவ வார்டில் மது விருந்துடன் புத்தாண்டை கொண்டாடி இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக அன்புமணி விமர்சித்துள்ளார். போதையை ஒழிப்பதற்கான அரசு ஹாஸ்பிடலை, போதையை வளர்க்கும் குடிப்பகங்களாக மாற்றியது தான் திமுக அரசின் சாதனை என சாடியுள்ளார். மேலும் இவை அனைத்துக்கும் ஒரே தீர்வு ஆட்சியிலிருந்து திமுகவை அகற்றுவது தான் என்றும் கூறியுள்ளார்.

News January 3, 2026

BIG NEWS: அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் அறிவிப்பு

image

அரசு ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்(Tamil Nadu Assured Pension Scheme) செயல்படுத்தப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன் மூலம் மாநில அரசு ஊழியர்கள் கடைசியாக பெற்ற ஊதியத்தில் 50% பென்ஷன் கிடைக்கும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நீண்ட காலமாக பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வரும் நிலையில், புதிதாக இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 3, 2026

சற்றுமுன்: கூட்டணி இல்லை.. விஜய்க்கு அதிர்ச்சி

image

தவெகவுடன், காங்., கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், கூட்டணி பற்றி திமுகவுடன் மட்டுமே பேசி வருவதாக காங்., மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார். தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்படும் தகவல் வெறும் வதந்தி என்றும் தெளிவுபடுத்திய அவர், தொகுதிப் பங்கீடு விரைவில் முடிவாகும் என்றும் கூறியுள்ளார். இதனால் திமுக – காங்., கூட்டணி உறுதியாகியுள்ளது.

News January 3, 2026

FLASH: பொங்கல் ஜல்லிக்கட்டு தேதிகள் வெளியீடு

image

பொங்கல் பண்டிகையின் முக்கிய அங்கமாக கருதப்படும் பிரதான ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜன.17-ம் தேதி நடைபெறவுள்ளது. அவனியாபுரத்தில் ஜன.15-ம் தேதியும், பாலமேட்டில் ஜன.16-ம் தேதியும் நடைபெறும் என மதுரை கலெக்டர் பிரவீன்குமார் அறிவித்துள்ளார்.

News January 3, 2026

உங்க ஊரில் வேலை வேணுமா? Way2News-ல் பாருங்கள்!

image

Way2News ஆப், புதிதாக உள்ளூர் வேலைவாய்ப்புகள் பிரிவை அறிமுகம் செய்துள்ளது. இதில் உங்கள் ஊரில் உள்ள தொழிற்சாலை, அலுவலகம், திறன்சார்ந்த மற்றும் டெலிவரி பாய் உள்பட அனைத்து வகை வேலை வாய்ப்புகளையும் தெரிந்துகொள்ளலாம். உங்களுக்கு அருகில் உள்ள வேலைவாய்ப்புகளை அறிய Way2News app-ல் உள்ள Jobs பிரிவை பார்த்து பயனடையுங்கள். உங்களுக்கு மெனுவில் Jobs பிரிவு வரவில்லை எனில் Way2News App-ஐ அப்டேட் செய்யவும்.

error: Content is protected !!