news

News December 27, 2024

அந்த நாள் ஞாபகம்…நெஞ்சிலே!!

image

ஒரு காலத்தில் விளையாட சென்ற குழந்தையை வீட்டிற்கு கொண்டுவர தவிப்பார்கள். ஆனால், தற்போது பெரும்பாலான குழந்தைகள் வெளியே செல்வதே இல்லை. மொபைல் போன் இல்லாத காலத்தில் வளர்ந்தவர்களிடம் கேளுங்கள் அது எப்படியான vibe என? கிரிக்கெட், கபடி, கில்லி, கண்ணாமூச்சி, 7 ஸ்டோன்ஸ், பட்டம் விடுவது என நினைவுகள் அதிகம். இதில் சொன்னது சில விளையாட்டுகளே. லிஸ்ட் இன்னும் பெருசு. உங்களுடைய சிறுவயது நினைவுகளை சொல்லுங்க…

News December 27, 2024

‘மாருதி 800’ நாயகன் ஒசாமு சுசுகி காலமானார்

image

சுசுகி மோட்டார்ஸின் Ex தலைவர் ஒசாமு சுசுகி (94), லிம்போமா நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், காலமானதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். 40 ஆண்டுகளுக்கும் மேலாக சுசுகி நிறுவனத்தைத் வழிநடத்திய ஒசாமு, சுசுகி மோட்டார்ஸை வட அமெரிக்கா, ஐரோப்பா வரை தடம் பதிக்கச் செய்தவர். இவர் உருவாக்கிய நடுத்தர மக்களுக்கான ‘மாருதி 800’ இந்திய சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

News December 27, 2024

அமைச்சர் Vs காவல் ஆணையர்.. மாணவி வழக்கில் முரண்பாடு

image

அண்ணா யுனிவர்சிட்டி மாணவி வன்கொடுமை வழக்கில், அமைச்சர் கோவி.செழியன், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் கூறிய தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாக உள்ளன. கல்லூரியின் POSH கமிட்டி மூலம் மாணவி புகார் அளித்ததாக அருண் கூறிய நிலையில், கல்லூரிக்குத் தெரியாமலேயே மாணவி புகார் அளித்ததாக அமைச்சர் தெரிவித்திருந்தார். ஞானசேகரனின் மனைவி, அதே கல்லூரியில் பணிபுரியும் தகவலும் மறைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

News December 27, 2024

மும்பை தாக்குதலின் மாஸ்டர் மைண்ட் தீவிரவாதி மரணம்

image

166 பேர் படுகொலை செய்யப்பட்ட மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதி ஹஃபீஸ் அப்துல் ரஹ்மான் பாகிஸ்தானில் மாரடைப்பால் உயிரிழந்தார். லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தின் துணை தலைவரான அப்துல், டெல்லி செங்கோட்டையில் நடந்த தாக்குதலுக்கும் மூளையாக செயல்பட்டவர். கடந்த 2023ல், ஐநா பாதுகாப்பு கவுன்சிலால் உலகளாவிய தீவிரவாதியாகவும் அவர் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News December 27, 2024

மீனவர் பிரச்னையில் இனி பேச்சுவார்த்தை இல்லை: SL

image

தமிழக மீனவர் விவகாரத்தில் இனிமேல் பேச்சுவார்த்தை இல்லை என்று, இலங்கை அமைச்சர் சந்திரசேகரன் அறிவித்துள்ளார். தமிழக மீனவர்களை அத்துமீறி இலங்கை கடற்படை கைதுசெய்து வருகிறது. இதை தடுக்குமாறு, மாநிலத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் எழுப்பும் நிலையில், சந்திரசேகரனின் பேச்சு, தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மீனவர்களுக்கு பாதுகாப்பில்லாத சூழலும் நீடிக்கிறது.

News December 27, 2024

லக்கி பாஸ்கர் இயக்குநருடன் கூட்டணி போடும் சூர்யா

image

லக்கி பாஸ்கர் படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அவருடன் சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நாகவம்சி பேச்சுவார்த்தை நடத்தியதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படம் இந்தியாவில் முதல் கார் இன்ஜின் எப்படி உருவாக்கப்பட்டது என்பதை குறித்து கதைக்களம் என்பதால் இப்படத்திற்கு ‘760 சிசி’ என தலைப்பு வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

News December 27, 2024

ஆபரேஷனுக்கு பிறகு மன்மோகன் கேட்ட முதல் கேள்வி

image

2009இல் பிரதமராக இருந்தபோது மன்மோகன்சிங்கிற்கு இதய அறுவை சிகிச்சை 11 மணி நேரம் மேற்கொள்ளப்பட்டது. சில மணி நேரம் மயக்கம் தெளிந்து கண்விழித்த மன்மோகன், நாடு எப்படி உள்ளது? காஷ்மீர் எப்படி இருக்கிறது ? என முதன்முதலில் கேள்வி எழுப்பியுள்ளார். தனது உடல்நிலை குறித்து எதுவும் கேட்கவில்லை. இந்த நினைவுகளை அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ரமாகாந்த் பாண்டா தற்போது நினைவு கூர்ந்துள்ளார்.

News December 27, 2024

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் இனி ₹2 லட்சம்

image

இன்னுயிர் காப்போம் திட்டத்தின் நிதியுதவி உயர்வு அமலுக்கு வந்துள்ளது. சாலை விபத்துகளில் சிக்கும் நபர்களை உடனடியாக மீட்டு அருகில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கப்படுகிறது. இதுவரை, விபத்தில் சிக்கியவர்களுக்கு ₹1 லட்சம் அரசால் சேவை கட்டணமாக வழங்கப்பட்டது. தற்போது அது ₹2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டம் மாநிலத்தில் 721 ஹாஸ்பிடல்களில் பயன்பாட்டில் உள்ளது.

News December 27, 2024

மாணவி வன்கொடுமை வழக்கை CBIக்கு மாற்றுக: EPS

image

அண்ணா பல்கலை.,மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல் ஆணையரும், உயர்க்கல்வி அமைச்சரும் கூறும் விளக்கங்கள் முரண்படுகின்றன என்று இபிஎஸ் சந்தேகம் எழுப்பியுள்ளார். கைதான ஞானசேகரன், இன்னொரு சார் என்று ஒருவரை குறிப்பிட்டதாக பாதிக்கப்பட்ட மாணவி புகார் கூறியுள்ளார். ஆனால், அந்த சார் யார் என்பதை காவல்துறை மறைக்கிறது என சாடிய அவர், இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

News December 27, 2024

சொன்னது 6.. அடித்ததோ 8 .. அசத்தல் அண்ணாமலை

image

கோவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, இன்று தன்னைத் தானே 6 முறை சாட்டையால் அடிக்கப் போவதாக கூறியிருந்தார். பொதுவாக அரசியல்வாதிகள் பேட்டியின்போது ஏதாவது கூறிவிட்டு பிறகு மழுப்பி விடுவர். ஆனால் அண்ணாமலையோ ஒருபடி மேலே சென்று, 6 முறைக்கு பதிலாக, 8 முறை அடித்துக் கொண்டார். சமூக வலைதளங்களில் பாஜகவினர் இதை குறிப்பிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

error: Content is protected !!