news

News January 12, 2026

முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல்

image

தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி மனைவி மறைவுக்கு CM மு.க.ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். வத்சலா உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தாத நிலையில், தொலைபேசி மூலம் அழகிரியை தொடர்பு கொண்டு தனது இரங்கலை கூறியுள்ளார். இதற்கிடையில், திமுக நிர்வாகிகள், விசிக ரவிக்குமார் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

News January 12, 2026

பொங்கலுக்கு அடுத்த ஜாக்பாட்.. பெண்களுக்கு HAPPY NEWS

image

பொங்கலுக்குள் பெண்களுக்கு அடுத்த மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியாக இருப்பதாக <<18826786>>ஐ.பெரியசாமி<<>> நேற்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், 2026 தேர்தலில் பெண்களின் வாக்குகளை கவரும் வகையில் மகளிர் உரிமைத்தொகையை உயர்த்துவது குறித்த ஜாக்பாட் அறிவிப்பு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. பொங்கலுக்கு இன்னும் 3 நாள்களே இருப்பதால், நாளை அல்லது நாளை மறுநாள் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

News January 12, 2026

பஸ்ஸில் அதிக கட்டணமா? இங்கு புகார் செய்யலாம்!

image

பொங்கலையொட்டி ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் 1800 425 6151 என்ற எண்ணில் போன் வாயிலாகவோ, வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் அல்லது வாய்ஸ் மெசேஜ் ஆகவோ புகார் அளிக்கலாம் என TN அரசு அறிவித்துள்ளது. மேலும், அதிகம் வசூலிக்கும் ஆம்னி பஸ்களுக்கு அபராதம் விதித்தும், வாகனங்களை சிறைபிடித்தும் நடவடிக்கை பாயும் எனவும் எச்சரித்துள்ளது.

News January 12, 2026

அதிமுக வாக்குகள் விஜய்க்கு செல்லாது: கவுதமி

image

அதிமுகவின் வாக்குகள் விஜய்க்கு செல்ல வாய்ப்பு இல்லை என நடிகை கவுதமி கணித்துள்ளார். அதிமுக சார்பில் ராஜபாளையத்தில் போட்டியிட அவர் இன்று விருப்பமனு அளித்தார். அப்போது பேசிய அவர், பொதுவாழ்க்கையில் நமக்கு வரும் சவால்களை எப்படி சந்திக்கிறோம் என்பதை பொறுத்து தான் தலைமைத்துவம் கணிக்கப்படும் எனவும், விஜய்யின் இந்த அரசியல் பயணத்தை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

News January 12, 2026

BREAKING: ‘ஜன நாயகன்’.. விஜய்க்கு அடுத்த அதிர்ச்சி

image

<<18835502>>’ஜன நாயகன்’ தணிக்கை சான்றிதழ்<<>> விவகாரத்தில், படக்குழு சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்துள்ளது. இந்நிலையில், சென்சார் போர்டும் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என கேட்டுக் கொண்டுள்ளது. <<18806489>>தணிக்கை சான்றிதழ் சிக்கல்<<>> தீரும் என எதிர்பார்த்த விஜய்க்கு, சென்சார் போர்டின் நடவடிக்கை அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

News January 12, 2026

தங்க மனசுக்காரருக்கு ₹1 லட்சம் வெகுமதி

image

குப்பையில் கண்டெடுத்த 45 சவரன் நகைகளை போலீசிடம் ஒப்படைத்த <<18834535>>தூய்மைப் பணியாளர் பத்மாவை<<>>, CM ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார். பிறருக்கு முன்னுதாரணமாக திகழ்ந்ததை பாராட்டி வாழ்த்திய CM ஸ்டாலின், பரிசுத்தொகையாக ₹1 லட்சத்திற்கான காசோலையையும் வழங்கினார். ஏழ்மையில் இருந்தாலும் பிறர் பொருளுக்கு ஆசைப்படாத பத்மாவுக்கு வாழ்த்துகள் குவிகின்றன.

News January 12, 2026

விசா இல்லாமல் சுற்றி வர ஆசையா?

image

இயற்கை எழில் கொஞ்சும் அழகிய நாடுகளை விசா இல்லாமல் சுற்றிப் பார்க்க ஆசையா? விசா தேவையில்லை என்பதால், பணம் மற்றும் நேரத்தை சேமிக்கலாம். டென்ஷன் இல்லாமல் பறந்து சென்று ஜாலியாக சுற்றிப்பார்க்கலாம். அந்த வகையில், என்னென்ன நாடுகளுக்கு விசா தேவையில்லை என்று மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

News January 12, 2026

OFFICIAL: ‘பராசக்தி’ வசூல் இவ்வளவு கோடியா..!

image

‘ஜன நாயகன்’ வெளியாகாததால் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான SK-வின் ’பராசக்தி’ 2 நாளில் ₹51 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. படத்திற்கு கலவையான விமர்சனம் வந்த நிலையிலும், முதல் நாளில் ₹27+ கோடி, 2-வது நாளில் ₹24+ கோடி வசூல் செய்துள்ளது. பொங்கலுக்கு தொடர் விடுமுறை வருவதால், இப்படம் ₹100 கோடியை கடக்கும் என திரைத்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

News January 12, 2026

அண்ணாமலை பாஜகவில் ஜீரோ தான்: ஆதித்யா தாக்கரே

image

தேர்தலில் தோற்று டெபாசிட் கூட வாங்க முடியாத <<18833393>>அண்ணாமலை<<>>, மும்பையை பற்றி எங்களுக்குச் சொல்கிறாரா என சிவசேனா (UBT) கட்சியின் MLA ஆதித்ய தாக்கரே விமர்சித்துள்ளார். மேலும், அண்ணாமலை பாஜகவில் கிட்டத்தட்ட ஜீரோ தான். ஆனால் அவர் அடுத்த PM போல நடந்துகொள்கிறார் என்றும், மகாராஷ்டிராவை அவமதித்த அண்ணாமலை மற்றும் பாஜகவை மக்கள் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

News January 12, 2026

கோல்டன் குளோப்ஸ்: ₹9 கோடிக்கு Gift Bag!

image

கோல்டன் குளோப்ஸ் விருது விழாவில் கலந்து கொள்ளும் தொகுப்பாளர்கள், வெற்றியாளர்களுக்கு கிஃப்ட் பேக் வழங்குவது வழக்கம். ஆனால், இந்த முறை கோல்டன் குளோப்ஸ் வரலாற்றிலேயே மிகவும் விலை உயர்ந்த, சுமார் ₹9 கோடி மதிப்பிலான பிரம்மாண்ட கிஃப்ட் பேக் வழங்கப்பட்டுள்ளது. இதில், தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வதேச பயண வவுச்சர்கள், அரிய வகை ஒயின்கள், விலையுயர்ந்த சரும பாதுகாப்பு பொருள்கள் இடம்பெற்றுள்ளன.

error: Content is protected !!