news

News November 29, 2024

புயல் வரும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு

image

வங்கக் கடலில் உருவாகாது என்று முடிவு செய்யப்பட்ட ஃபெங்கல் புயல் அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நேற்று மாலை வலுவிழக்கத் தொடங்கிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறாது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. ஆனால், அது இன்று காலை மீண்டும் வலுவடையத் தொடங்கியிருக்கிறது. இதனால், இப்புயல் நாளை மகாபலிபுரம் காரைக்கால் இடையே கரையை கடக்கவுள்ளது.

News November 29, 2024

மணிப்பூர் குறித்து விவாதிக்க திமுக நோட்டீஸ்

image

மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என திமுக சார்பில் திருச்சி சிவா நோட்டீஸ் கொடுத்துள்ளார். ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் பிரச்னையை தடுக்க ஆளும் பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஏற்கெனவே அதானி விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றன.

News November 29, 2024

பொது அறிவு வினா – விடை

image

1) தங்கப் போர்வை நிலம் என அழைக்கப்படும் நாடு எது? 2) கண்ணீர் சுரப்பியின் பெயர் என்ன? 3) இந்தியாவின் முதல் பெண் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் யார்? 4) தமிழ்நாட்டின் மோஸ் எனப் போற்றப்படும் எழுத்தாளர் யார்? 5) IATA என்பதன் விரிவாக்கம் என்ன? 6) நீருக்கடியில் பேசும் குரலைக் கேட்ட உதவும் கருவி எது? 7) வியட்நாமின் தேசிய மலர் எது?விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான பதிலை 2 மணிக்கு பாருங்க.

News November 29, 2024

நாங்க காதலிக்கவே இல்லை..அன்றே சொன்ன தனுஷ்

image

ரஜினி- ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து தான் இப்போது ஹாட் டாபிக். எதனால் இந்த தம்பதி விவாகரத்து செய்தனர் என்ற விவரத்தை தான் பலரும் எதிர்பார்க்கிறார்கள். பல காரணங்கள் கூறப்பட்டாலும், உறுதிப்படுத்தப்பட்ட தகவல் இல்லை. இதற்கிடையில் தனுஷ், “நாங்கள் காதலித்தெல்லாம் திருமணம் செய்யவில்லை” எனக் கூறிய விஷயம் வைரலாகி வருகிறது. இதனை திருமணம் முடிந்த பிறகு, செய்தியாளர்களை சந்தித்து போது தனுஷ் கூறியவையாகும்.

News November 29, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் மதியம் 1 மணி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

News November 29, 2024

மாலைக்கு பதில் ஹெல்மெட்.. அம்சமான Awareness!

image

சத்தீஸ்கரில் மாலைக்கு பதில் ஹெல்மெட் மாற்றி பிரேந்திர சாஹு- ஜோதி தம்பதியினர் திருமணம் செய்துள்ளனர். கடந்த 2022-ல் தந்தை சாலை விபத்தில் உயிரிழந்தது மணமகனுக்கு தீராத வலியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தனது திருமணத்தின் மூலம் சாலை பாதுகாப்பிற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். முதலில் மோதிரம் மாற்றிக் கொண்ட தம்பதி, பின்னர் ஹெல்மெட் மாற்றிக் கொண்டு பந்தத்தை உறுதி செய்தனர்.

News November 29, 2024

உக்ரைனின் பனிக்காலத்தை ஆயுதமாக்கிய ரஷ்யா!

image

ஒரே இரவில் 90 ஏவுகணைகள், 100 ட்ரோன் தாக்குதல்களை நடத்தி உக்ரைனின் மின் ஆற்றல் கட்டமைப்பை ரஷ்யா சிதைத்துள்ளது. அதனால், இந்த பனிக்காலத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான உக்ரைன் மக்கள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியுள்ளனர். 9 மணி நேரமாக தொடர் தாக்குதல் நடத்தப்பட்டதால், மெட்ரோ ரயில் நிலையங்களில் மக்கள் தஞ்சமடைந்துள்ளனர். ரஷ்யா பனிக்காலத்தை ஆயுதமாக்குவதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது.

News November 29, 2024

நெஞ்சில் நிற்கும் Paltan.. விடை பெற்ற கிஷன்

image

7 ஆண்டுகளாக மும்பை அணிக்காக விளையாடிய இஷான் கிஷன், உருக்கமாக Good Bye போஸ்ட் போட்டுள்ளார். நல்ல மனிதனாகவும், ஒரு வீரனாகவும் தன்னை உருவாக்கியதோடு, மறக்க முடியாத நினைவுகளை MI பரிசளித்ததாகவும், இந்த MI, மும்பை, Paltan எப்போதும் தனது நெஞ்சில் நிறைந்திருக்கும் எனவும் அவர் கனத்த இதயத்துடன் விடைபெற்றுள்ளார். கிஷனை, SRH ₹10 கோடிக்கு வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

News November 29, 2024

பாஜக, அதிமுக நிர்வாகிகள் வீடுகளில் ED ரெய்டு

image

புதுக்கோட்டையில் பாஜக, அதிமுக நிர்வாகிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது. புதுக்கோட்டை பாஜக மாவட்ட பொருளாளர் முருகானந்தம், அவரது சகோதரர் அதிமுக நிர்வாகி பழனிவேல், ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வரும் மற்றொரு நபர் ஆகியோர் வீடுகளில் சோதனை நடக்கிறது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் LED லைட், பிளிச்சிங் பவுடர் ஒப்பந்தங்களில் நடந்த முறைகேடு தொடர்பாக இந்த சோதனை நடப்பதாகக் கூறப்படுகிறது.

News November 29, 2024

தங்கம் விலை சவரனுக்கு ₹560 உயர்வு

image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ₹560 உயர்ந்து ₹57,280க்கு விற்கப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராம் ₹7,160-க்கு விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளி விலையும் ஒரு கிராமுக்கு ரூ.2 அதிகரித்து 100 ரூபாய்க்கும், கட்டி வெள்ளி 1 கிலோ ஒரு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாகத் தங்கம், வெள்ளி விலை ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகிறது.

error: Content is protected !!