news

News December 19, 2024

சபரிமலை ஐயப்பனை தரிசித்த சசிகுமார்!

image

நடிகரும், இயக்குநருமான சசிகுமார் சபரிமலை ஐயப்பனை தரிசித்து உள்ளார். மாலை அணிந்து 48 நாள்கள் ஐயப்பனுக்கு விரதமிருந்து அவர் இருமுடி கட்டி சக அய்யப்ப பக்தர்களுடன் சென்று சாமி தரிசனம் செய்தார். சசிகுமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘நந்தன்’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து சசிகுமார் தற்போது ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தில் சிம்ரன் உடன் நடித்து வருகிறார்

News December 19, 2024

பாஜக எம்பிக்கள் தள்ளிவிட்டனர்: கார்கே

image

பார்லிமென்ட் நுழைவு வாயிலில் BJP எம்பிக்கள் தன்னை தள்ளிவிட்டதாகக் காங்கிரஸ் எம்பி மல்லிகார்ஜுன கார்கே மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும், மாநிலங்களவையில் நேற்று முன்தினம், அம்பேத்கர் குறித்து அவை உரிமையை மீறும் வகையில் பேசிய அமைச்சர் <<14910754>>அமித் ஷா<<>> மீது பார்லிமென்ட் விதிகள் மற்றும் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தனியாக நோட்டீஸ் அளித்துள்ளார்.

News December 19, 2024

ஒரே நாளில் 4 படங்கள் ரிலீஸ்!

image

நாளை ஒரே நாளில் 4 திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாவதால் சினிமா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வெற்றி மாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘விடுதலை 2’ திரைப்படம் நாளை திரைக்கு வருகிறது. அதேபோல, சிறுவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் ‘முஃபாசா – தி லயன் கிங்’, உபேந்திராவின் ‘யு.ஐ’, ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள ‘மார்கோ’ ஆகிய படங்களும் வெளியாகவுள்ளன.

News December 19, 2024

இடைத்தேர்தலில் தவெக போட்டியில்லை

image

நடைபெறவிருக்கும் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தவெக போட்டியிடாது என்று தகவல் வெளியாகியிருக்கிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த தவெக நிர்வாகிகள், “2026 சட்டமன்றத் தேர்தல்தான் எங்களது இலக்கு. அதுவரை எந்த தேர்தலையும் சந்திக்கப் போவதில்லை. இடைத்தேர்தலில் விஜய் யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவும் மாட்டார்” என்று கூறியுள்ளனர்.

News December 19, 2024

ரூபாய் மதிப்பு சரிந்தால் மக்களுக்கு என்ன பாதிப்பு?

image

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது. இதனால் இறக்குமதி செலவினம் உயரும். கச்சா எண்ணெய் விலை உயருவதால் பெட்ரோல், டீசல் முதல் காய்கறிகள் விலை வரை, நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களில் விலை உயரும். எலக்ட்ரானிக் பொருள்கள், இயந்திரங்கள், ரசாயனங்கள் என இறக்குமதி பொருள்களின் விலைகள் உயரும். முதலீட்டாளர்களையும் இது பாதிக்கும். மொத்தத்தில் உங்கள் செலவுகளை அதிகரிக்கும்.

News December 19, 2024

27 ஆண்டுகளை நிறைவு செய்த ‘டைட்டானிக்’

image

உலகெங்கிலும் உள்ள காதலர்களால் இன்றளவும் கொண்டாடப்பட கூடிய எவர்க்ரீன் கிளாசிக் ஹாலிவுட் திரைப்படம் ‘டைட்டானிக்’. ஹாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான இயக்குநரான ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த டிச.19இல் 1997ம் ஆண்டு வெளியான இப்படம் இன்றுடன் 27 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இன்றளவும் நாயகன் ஜாக், நாயகி ரோஸ் உடன் பிரம்மாண்ட கப்பலில் முன்பகுதியில் நிற்கும் காட்சியை இன்றளவும் மறக்க முடியாது.

News December 19, 2024

அமித்ஷாவை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்

image

மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்றத்தில் பேசிய அமித்ஷா, அம்பேத்கர் பெயரை முழக்கமிடுவது ஃபேஷன் எனக் கூறியது சர்ச்சையானது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுகவினர் அம்பேத்கர் புகைப்படம் கொண்ட பதாகைகளை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News December 19, 2024

நடிகர் கோதண்டராமன் காலமானார்

image

பிரபல காமெடி நடிகரும் ஸ்டண்ட் மேனுமான கோதண்டராமன் நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 65. கலகலப்பு படத்தில் சந்தானத்துடன் இணைந்து காமெடியில் கலக்கிய அவர், 25 ஆண்டுகளாக ஸ்டண்ட் மேனாக சினிமாவில் பணியாற்றி வந்தார். இதற்குமுன், ’ஒன்ஸ் மோர்’, பகவதி, க்ரீடம், வேதாளம், திருப்பதி ஆகிய படங்களில் கோதண்டராமன் நடித்துள்ளார். #RIP

News December 19, 2024

பார்லிமென்ட்டில் களேபரம் ஏன்? திருச்சி சிவா விளக்கம்

image

பார்லிமென்ட் நுழைவு வாயிலில் தெருவில் சண்டை போடுவதைப் போன்ற சூழலை பாஜக எம்பிக்கள் உருவாக்கியதாக DMK எம்பி திருச்சி சிவா குற்றஞ்சாட்டியுள்ளார். பாஜகவினர் ராகுல் காந்தி மீது திட்டமிட்டு அவதூறு பரப்ப முயல்வதாகக் கூறிய அவர், அம்பேத்கர் விவகாரத்தில் அமித் ஷா மன்னிப்பு கேட்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும் எச்சரித்துள்ளார்.

News December 19, 2024

ரூபாய் மதிப்பு சரிந்தது ஏன்?

image

அமெரிக்க ஃபெடரல் வங்கியின் அறிவிப்பால் டாலருக்கு நிகரான <<14921105>> ரூபாயின் மதிப்பு<<>> முதல் முறையாக 85-ஐ கடந்து சரிந்தது. வட்டி வீதத்தை ஃபெடரல் வங்கி குறைக்கும் என முதலீட்டாளர்கள் எதிர்பார்த்த நிலையில், வெறும் 0.25% மட்டும் குறைத்ததுடன், பணவீக்கம் குறைய இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகள் ஆகலாம் என நெகடிவ் கமென்ட்டையும் ஃபெடரல் வங்கி கொடுத்தது. இதனால், ரூபாய் உள்பட சில ஆசிய நாணயங்களின் மதிப்பு சரிந்துள்ளது.

error: Content is protected !!