News January 10, 2025

நீதிக்கு கிடைத்த வெற்றி: மா.சுப்பிரமணியன்

image

ADMK கவுன்சிலர்களை தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து விடுதலையானது, சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என அமைச்சர் <<15115542>>மா.சுப்பிரமணியன்<<>> கூறியுள்ளார். நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2002இல் அதிமுக கவுன்சிலர்கள் தாக்கியதில் திமுக கவுன்சிலர்கள் தான் பலத்த காயமடைந்ததாக குறிப்பிட்டார். புனையப்பட்ட இந்த வழக்கால் 22 ஆண்டுகளாக கோர்ட் படிகளை ஏறும் நிலைக்கு ஆளானேன் என்றார்.

Similar News

News November 18, 2025

இன்று ஒரே நாளில் விலை ₹3,000 குறைந்தது

image

வெள்ளி விலை சரசரவென சரிந்து வருகிறது. இன்று(நவ.18) கிராமுக்கு ₹3 குறைந்து ₹170-க்கும், பார் வெள்ளி கிலோவுக்கு ₹3,000 குறைந்து ₹1,70,000-க்கும் விற்பனையாகிறது. கடந்த 13-ம் தேதி பார் வெள்ளி 1 கிலோ ₹1,83,000-க்கு விற்பனையான நிலையில், 5 நாள்களில் மட்டும் ₹13,000 குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில், வெள்ளி விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால் வரும் நாள்களில் மேலும் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பள்ளி HM-களுக்கு அமைச்சர் புதிய உத்தரவு!

image

மழைக்காலம் என்பதால் பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க பள்ளி HM-களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவிட்டுள்ளார். *பள்ளிகளில் தண்ணீர் தேங்கக்கூடாது; அப்படி தேங்கினால் உடனடியாக அகற்ற வேண்டும். *பள்ளி வளாகத்தில் உள்ள கிணறுகளை மூட வேண்டும். *மின்கசிவு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மேலும், மாணவர்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

error: Content is protected !!