News January 10, 2025
மா.செ.க்களை தனித்தனியாக சந்திக்கிறார் விஜய்

தவெகவின் மாவட்ட செயலாளர்களாக நியமனம் செய்யப்பட உள்ள நபர்கள் இன்று இறுதி செய்யப்படுகின்றனர். தொடர்ந்து, ஒரு மனதாக தேர்வு செய்யப்படும் 100 மாவட்டச் செயலாளர்களின் பட்டியல் விரைவில் வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்கு முன்பு, இறுதி செய்யப்படும் மாவட்ட செயலாளர்கள் அனைவரையும் தனித்தனியாக சந்தித்து விஜய் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News November 14, 2025
200 இடங்களில் NDA முன்னிலை

மொத்தமுள்ள 243 தொகுதிகளில் NDA கூட்டணி 200 இடங்களில் முன்னிலையில் உள்ளது. MGB கூட்டணி 37 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது. மற்றவை 6 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், ஜன் சுராஜ் கட்சி ஒரு இடத்தில் கூட முன்னிலை பெறவில்லை. BJP – 91, JD(U) – 81, RJD – 26, INC – 4, AIMIM – 5 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
News November 14, 2025
நாளை பள்ளிகள் விடுமுறை.. அறிவித்தார் ஆட்சியர்

புதுச்சேரியில் நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே விடப்பட்ட விடுமுறை ஈடுகட்டும் வகையில் நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறுவதால், நாளை பள்ளிகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளைய விடுமுறை ஈடுசெய்ய ஜன.3-ம் தேதி வேலை நாளாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 14, 2025
Beef வைத்திருந்ததற்காக ஆயுள் தண்டனை!

நாட்டிலேயே முதல் முறையாக, குஜராத்தில், இறைச்சிக்காக மாடுகளை கொன்றதாக 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து குஜராத் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2023-ல் அம்ரேலியில் சட்டவிரோதமாக மாடுகளை கொன்று 40 கிலோ இறைச்சியை வைத்திருந்ததாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். குஜராத் விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், 3 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா 6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


