News January 10, 2025
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த +2 மாணவன் கைது

எக்ஸ்ஸாமில் இருந்து தப்பிக்க பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த +2 மாணவனை போலீசார் கைது செய்தனர். கடந்த சில வாரங்களாக தலைநகர் டெல்லிக்கு தலைவலியாக இருந்த வெடிகுண்டு மிரட்டலை தீவிரமாக விசாரித்த போலீசார், சிறுவனை தற்போது கைது செய்துள்ளனர். இவர், இதுவரை 6 முறை இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்ததும், ஒரே முறை 23 பள்ளிகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளதும் தெரியவந்துள்ளது. இத பத்தி உங்க கமெண்ட் என்ன?
Similar News
News November 11, 2025
8-வது முறையாக முதல்வராகிறாரா நிதிஷ்?

பிஹார் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி நிதிஷ் குமார் 8-வது முறையாக அம்மாநில CM ஆக பொறுப்பு ஏற்பார் என தெரிகிறது. ஏற்கெனவே பிஹாரில் அதிக நாள்கள் CM அரியணையில் அமர்ந்தவர் என்ற பெருமை கொண்ட நிதிஷ் குமார், BJP, RJD என மாறி மாறி கூட்டணி வைத்திருக்கிறார். அவர் 1996-ல் இருந்து ஒருமுறை கூட சட்டமன்ற தேர்தலில் களம் கண்டதில்லை. சட்டமேலவை உறுப்பினராகவே இதுவரை நீடித்து வருகிறார்.
News November 11, 2025
இதெல்லாம் இவ்வளவு பழசா? என்ன சொல்றீங்க?

சுதந்திரத்திற்கு முன்பு தொடங்கப்பட்ட சில உள்நாட்டு பிராண்டுகள், இன்றும் நமது அன்றாட வாழ்வில் இருந்து வருகின்றன. நமது தினசரி பயன்பாட்டில் இடம்பிடித்து காலத்தால் அழியாத பிராண்டுகளாக உருவெடுத்துள்ளன. அவை என்னென்ன பிராண்டுகள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் நீங்கள் பயன்படுத்தும் பிராண்ட் எது? கமெண்ட்ல சொல்லுங்க.
News November 11, 2025
BIHAR EXIT POLL: முழு விவரம்..!

பிஹாரில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின், கருத்துக்கணிப்பு முடிவுகள் இவைதான். அனைத்து கருத்துக்கணிப்புகளும் மீண்டும் NDA ஆட்சி அமைவது உறுதி என தெரிவிக்கின்றன. MGB கூட்டணி அதிகபட்சமாக 108 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஜன் சுராஜ், இதர கட்சிகள் 2-13 வரை கைப்பற்ற கூடும் என கருத்துக்கணிப்பு முடிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.


